scorecardresearch

ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் நிறுவனத்தில் வேலை; 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஊட்டியில் உள்ள தேசிய வானியிற்பியல் நிறுவன வேலைவாய்ப்பு; 10, 12 மற்றும் டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஊட்டி ரேடியோ டெலஸ்கோப் நிறுவனத்தில் வேலை; 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Ooty Radio telescope recruitment 2022 for various jobs: ஊட்டி ரேடியோ தொலைநோக்கி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய ரேடியோ வானியிற்பியல் மையத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் ஊட்டியில் ரேடியோ தொலைநோக்கி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழில்நுட்ப உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 31.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: IBPS PO 2022; வங்கி வேலை; டிகிரி தகுதிக்கு 6,932 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

Technical Assistant (Electronics)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Scientific Assistant (Electronics/Computers)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.எஸ்.சி அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Laboratory Assistant (Electronics)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம் வேண்டும். அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Tradesman – B (Electrical)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : எலட்ரிக்கல் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Work Assistant (Admin)

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Security Guard

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

வயதுத் தகுதி : 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.tinyurl.com/ncra2022 என்ற இணையதளப் பக்கம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.08.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.ncra.tifr.res.in/ncra/opportunities/non-academic/openings/2022/2022-5 என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Ooty radio telescope recruitment 2022 for various jobs