New Update
/indian-express-tamil/media/media_files/5Vj3jiF6Jb72oIg3IwA0.jpg)
நெக்ஸ்ட் தேர்வெழுதிய 34,608 மாணவர்களில், 7,233 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்,
மருத்துவக் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்று, பட்டம் பெற்றுத் திரும்பிய பிறகு இந்தியாவில் பயிற்சி செய்ய விரும்பும் மாணவர்கள், நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
நெக்ஸ்ட் தேர்வெழுதிய 34,608 மாணவர்களில், 7,233 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்,
நெக்ஸ்ட் என்று அழைக்கப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் (FMGE) பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறத் தவறியுள்ளனர்.
மருத்துவக் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்று, பட்டம் பெற்றுத் திரும்பிய பிறகு இந்தியாவில் பயிற்சி செய்ய விரும்பும் மாணவர்கள், நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
பொதுவாக மாணவ- மாணவியர் ரஷ்யா, பெலாரஸ், அஜர்பைஜான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், சீனா, ருமேனியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்குச் சென்று எம்.பி.பி.எஸ்-க்கு இணையான மருத்துவப் பட்டப்படிப்பைப் பெறுகிறார்கள்.
இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) விதிப்படி, வெளிநாட்டில் இருந்து பட்டம் பெற்று திரும்பிய பிறகு இந்தியாவில் நேரடியாகச் சேவை செய்ய அனுமதி இல்லை. இவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படும்.
இந்நிலையில், இந்தத் தேர்வின் முடிவுகளின் சதவீதம் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள் 20.89 சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தேர்வெழுதிய 34,608 மாணவர்களில், 7,233 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர், மீதமுள்ள 27, 375 பேர் தோல்வியுற்றுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.