தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் தேர்வுகள் நடைபெற்று காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படி கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. 7,247 மையங்களில் மொத்தம் 15,88,684 பேர் தேர்வு எழுதியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6,244 பணியிடங்களுக்கு 15 லட்சம் பேர் போட்டியிட்டுள்ளனர். முன்னதாக, தேர்வுக்கு 20 லட்சத்து 36,774 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில் 15.88 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். 4.48 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. சென்னையில் 432 மையங்களில் நடைபெற்ற குருப் 4 தேர்வில் ஒரு லட்சம் பேர் எழுதினர்.
குரூப் 4 பணியில் அதிகபட்சமாக தட்டச்சர் பணிக்கு 1,653 காலியிடங்கள் உள்ளன. அதைத் தொடர்ந்து வனக் கண்காணிப்பாளர் (தமிழ்நாடு வனத் துணைப் பணி) 526 காலியிடங்கள், 441 ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (தமிழ்நாடு அமைச்சர்) காலியிடங்கள் / நீதித்துறை அமைச்சர் சேவை) ஆகியவற்றிற்கு இந்த தேர்வு நடைபெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“