தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவ- மாணவியர் குறித்து புதன்கிழமை (மார்ச் 29) கேள்வியெழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் எழுத்துப்பூர்வ பதில் அளித்தார்.
அதில், “மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களில் இருந்து 2018-2023ஆம் காலகட்டங்களில் பட்டியல், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கல்வியை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது.
இதில் 6901 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் 3596 பட்டியல் பிரிவையும், 3949 பழங்குடி பிரிவையும் சார்ந்தவர்கள்.
இவர்களில் ஐ.ஐ.டி.,யில் கல்வியை பாதியில் இடைநிறுத்தியவர்களில் 2544 இதர பிற்படுத்தப்பட்டோர், 1362 பட்டியலினத்தவர்கள், 538 பழங்குடியினர் உள்ளனர்.
தொடர்ந்து, ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்களில் கல்வியை இடையில் நிறுத்தியவர்களில் 133 இதர பிற்படுத்தப்பட்டோர், 143 பட்டியலினத்தவர்கள், 90 பழங்குடியினர் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“