/indian-express-tamil/media/media_files/2025/10/24/nvidia-employees-2025-10-24-09-37-03.jpg)
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் கல்லூரிகளுக்கு சவாலா? ஆப்பிள், என்விடியா ஊழியர்களில் 30% பேர் Tier-3 பட்டதாரிகள்!
உலகளாவிய வேலை சந்தையை ஏ.ஐ. மாற்றி அமைத்து வரும் நிலையில், ஆப்பிள் (Apple) மற்றும் என்விடியா (Nvidia) போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவின் பிரபலமான கல்வி நிறுவனங்களில் (Tier-3 கல்லூரிகள்) இருந்து அதிக பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சரிபார்க்கப்பட்ட பணி நிபுணர்கள் பேசிக்கொள்ளும் 'பிளைண்ட் (Blind)' என்ற ஆஃப் நடத்திய புதிய ஆய்வின்படி, ஜோஹோ (Zoho), ஆப்பிள், என்விடியா ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சராசரியாக 34% (3-ல் ஒரு பகுதியினர்), நாட்டின் Tier-3 கல்லூரிகளில் இருந்து பட்டம் பெற்றவர்கள் ஆவர். டையர்-3 கல்லூரிகளில், ஐஐடிகள் (IITs), ஐஐஎம்கள் (IIMs) போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்படவில்லை.
ஆயிரத்து 602 இந்தியத் தொழில்நுட்ப நிபுணர்களிடம் செப்.17 முதல் 24 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு தொழில்நுட்ப வல்லுநரின் கல்லூரி பின்னணி அவரது தொழில் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதை ஆராய்வதே இதன் நோக்கமாகும். ஜோஹோ, ஆப்பிள், என்விடியா, எஸ்.ஏ.பி (SAP) மற்றும் பேபால் (PayPal) போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பதிலளித்தவர்களில் பலர், தங்கள் தொழில் வாழ்க்கையில் கல்லூரி பின்னணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) 2025 தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகள் பிரிக்கப்பட்டன: Tier 1 (ஐ.ஐ.டி.கள், ஐ.ஐ.எஸ்.சி, சிறந்த ஐ.ஐ.எம்.கள், பிட்ஸ் பிலானி), Tier 2 (என்ஐடிகள், டிடியூ, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் போன்றவை), Tier 3 (பிற மாநில அல்லது தனியார் பல்கலைக் கழகங்கள்) மற்றும் Tier 4 (வெளிநாட்டு நிறுவனங்கள்).
பிளைண்ட் ஆய்வின் கண்டுபிடிப்புகள், உயர்மட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களில் சேர வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் எதிர்காலம் உள்ளது என்பதைக் காட்டுகிறது. கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs), விசா (Visa) போன்ற பாரம்பரிய நிதி நிறுவனங்கள் கல்லூரிப் பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆள்சேர்ப்பில் திறமைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன என்பதையும் இது காட்டுகிறது.
"பொதுவாக, ஐஐடி/ஐஐஐடி/என்ஐடி போன்ற நிறுவனங்களில் இருந்து வருபவர்கள் நேர்காணல்களில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இங்கிருந்து நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 50% பேர் வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். மற்ற கல்லூரிகளைச் சேர்ந்தவர்களின் வெற்றி விகிதம் சுமார் 20 சதவீதம் மட்டுமே," என்று சேல்ஸ்ஃபோர்ஸ் (Salesforce) ஊழியர் ஒருவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மற்றொரு கோல்ட்மேன் சாக்ஸ் ஊழியர், "நிறுவனங்கள் ஐஐடிகளை மட்டும் பார்ப்பதில்லை. சிறிய நகரங்கள் மற்றும் Tier-3 கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளைத் தேடுகிறார்கள். முறையான பயிற்சி அளித்தால், யாராலும் ஒரு தொழில்நுட்ப ராக்ஸ்டாராக மாற முடியும் என நம்புகிறார்கள்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஏ.ஐ. காரணமாக வேலைச் சந்தை மோசமடைந்து வருவதாகக் கவலைகள் எழுந்துள்ள நிலையிலும், குறிப்பாகத் தொழில்நுட்பத் துறையில் ஏ.ஐ.யால் பணிநீக்கங்கள் அதிகரித்து வரும் சூழலிலும் இந்த ஆய்வு வெளிவந்துள்ளது. ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, அடுத்த 5 ஆண்டுகளில் 50% தொடக்க நிலை வேலைகள் (entry-level roles) ஏ.ஐ.யால் காணாமல் போகும் என்று கணித்துள்ளார். என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் போன்ற மற்றவர்கள், ஏ.ஐ. சில வேலைகளை ஒழித்தாலும், அதே நேரத்தில் புதிய வேலைகளை உருவாக்கும் என்று நம்புகின்றனர்.
Tier 1, 2 கல்லூரிகளைச் சேர்ந்த பெரும்பாலான பதிலளித்தவர்கள், மற்ற எந்தக் காரணிகளை விடவும் வளாகத் தேர்வுகளே (Campus Recruitment) தங்கள் தொழில் வாழ்க்கையை வடிவமைத்தன என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், Tier 3 மாணவர்களில் 59%, Tier 4 மாணவர்களில் 45% கல்லூரி என்பது சுயவிவரக் குறிப்பில் (Résumé) உள்ள ஒரு வரியைத் தவிர வேறில்லை என்று நம்புகின்றனர்.
கோல்ட்மேன் சாக்ஸ், விசா, அட்லாசியன், ஒரக்கிள், மற்றும் கூகுள் போன்ற பாரம்பரிய பன்னாட்டு நிறுவனங்கள் பொதுவாக வளாகத் தேர்வுகள் மூலமாகவே அதிக அளவில் ஆட்சேர்ப்பு செய்கின்றன. ஆயினும்கூட, இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் சராசரியாக 18 சதவீதம் பேர் Tier-3 கல்லூரிகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
உயர்மட்டப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றால் மட்டுமே அதிகச் சம்பளம் கிடைக்கும் என்பதற்குக் கட்டாய உத்தரவாதம் இல்லை. Tier 3 முன்னாள் மாணவர்களில் 15% பேர் மட்டுமே தங்கள் கல்வியால் அதிகப் பலன் பெற்றதாகக் கூறியுள்ளனர். மேலும், மொத்த பதிலளித்தவர்களில் 74% பேர் கல்லூரிப் பெயர்கள் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உதவியது அல்லது உதவவே இல்லை என்று கூறியுள்ளனர்.
வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (53%), தங்கள் வருமானத்தில் கல்லூரிப் பின்னணி சிறிய அல்லது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று உணர்ந்துள்ளனர். இந்த முடிவுகள் மற்ற ஆய்வுகளுடன் ஒத்துப்போகின்றன. உதாரணமாக, ஃபார்ப்ஸ் சமீபத்தில் நடத்திய ஆய்வில், 90% அதிகமான நிறுவனங்கள் பட்டங்களை விட ஊழியர்களின் திறமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, ​​சிறந்த ஆட்சேர்ப்பு முடிவுகளைப் பெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us