Advertisment

மத்திய அரசில் 9.7 லட்சம் காலியிடங்கள்; ரயில்வே, பாதுகாப்பு துறைகளில் அதிகம்

இந்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் 9,79,327 பணியிடங்கள் காலியாக உள்ளன; முப்படைகளிலும் 1.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன

author-image
WebDesk
New Update
jobs

மத்திய அரசில் 9.7 லட்சம் காலியிடங்கள் (பிரதிநிதித்துவ படம்)

மார்ச் 1, 2021 நிலவரப்படி, இந்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் 9,79,327 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இவற்றில் 2,93,943 பணியிடங்கள் ரயில்வேயில் காலியாக உள்ளன, மற்ற அனைத்து அமைச்சகங்களையும் விட ரயில்வேயில் அதிக அளவில் காலியிடங்கள் உள்ளன.

Advertisment

முப்படைகளிலும் 1.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன, இதில் அதிகபட்சமாக 1.36 லட்சம் பணியிடங்கள் இந்திய ராணுவத்தில் உள்ளன. இதற்கிடையில், ராணுவ மருத்துவப் படை மற்றும் ராணுவ பல் மருத்துவப் படையை உள்ளடக்கிய இந்திய ராணுவத்தில் 8,129 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: SSC CGL 2023: மத்திய அரசில் 7500+ பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க!

கடற்படையில், 12,428 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. 1,653 அதிகாரிகள், 29 மருத்துவ மற்றும் பல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் 10,746 மாலுமிகள் பற்றாக்குறையாக இருப்பதாக அமைச்சர் அஜய் பட் தனது பதிலில் தெரிவித்தார். இதேபோல், இந்திய விமானப்படையிலும், 7,031 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

உள்துறை, அஞ்சல் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவை அதிக காலியிடங்களைக் கொண்ட பிற துறைகளாகும்.

”காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. ரோஸ்கர் மேளாக்கள் (விரைவான வேலைவாய்ப்பு இயக்கங்கள்) அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்றன, இது மேலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஊக்கியாக செயல்படும்,” என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

‘ரோஸ்கர் மேளா’வை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் 10 லட்சம் இளைஞர்களை பணியமர்த்தும் நோக்கத்தை பகிர்ந்து கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment