scorecardresearch

பழனி முருகன் கோயில் வேலைவாய்ப்பு; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

இந்துசமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு; பழனி முருகன் கோயிலில் 14 காலியிடங்கள்; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

பழனி முருகன் கோயில் வேலைவாய்ப்பு; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Palani Murugan temple recruitment 2022 apply soon: தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில், மனநல மருத்துவர், செவிலியர், பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மனநல மருத்துவர் (Medical Officer – Psychiatrist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBBS and Diploma in Psychiatrist medicine படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000 (வாரம் ஒருமுறை மட்டுமே பணி)

மருத்துவ அலுவலர் (Medical Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBBS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000 (நாள் ஒன்றிற்கு ஒரு நேரம் மட்டுமே பணி)

செவிலியர் (Staff Nurse)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Diploma in Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

இல்லக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Degree in Master of Social welfare படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,000

சமூகப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Degree in Bachelor of Social welfare படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

பராமரிப்பு உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

தொழிற் பயிற்சியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தொழிற்படிப்புகளில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

பாதுகாவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 9,000

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இதையும் படியுங்கள்: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை; 10-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

முகவரி : இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.06.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Palani murugan temple recruitment 2022 apply soon