Advertisment

பொறியியல், தொழில்நுட்ப படிப்புக்கான கல்வி கட்டணத்தில் மாற்றம்... எவ்வளவு தெரியுமா?

கல்விக் கட்டணமாக நிறுவனங்கள் வசூலிக்கக்கூடிய உயர் வரம்பை ஒரு நிபுணர் குழு முதலில் பரிந்துரைத்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திருத்தம் வந்துள்ளது. இது வரை குறைந்த வரம்பு அல்லது குறைந்தபட்ச கட்டணம் எதுவும் இல்லை.

author-image
WebDesk
New Update
310 பொறியியல் கல்லூரிகளில் என்ன பிரச்னை? மாணவர் சேர்க்கை பாதிக்குமா?

பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் விதிக்கப்படும் கல்விக் கட்டணத்தின் உச்சவரம்பு மாற்றப்பட உள்ளது. குறைந்தபட்ச கட்டண வரம்பு உட்பட திருத்தப்பட்ட கட்டணக் கட்டமைப்பை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

Advertisment

கல்விக் கட்டணமாக நிறுவனங்கள் வசூலிக்கக்கூடிய உயர் வரம்பை ஒரு நிபுணர் குழு முதலில் பரிந்துரைத்த ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திருத்தம் வந்துள்ளது,

மார்ச் 10 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி பிஎன் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான தேசிய கட்டணக் குழுவின் அறிக்கையை AICTE இன் செயற்குழுஅங்கீகரித்து, அதனை ஆய்வு செய்ய மத்திய கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கு, ஆண்டிற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 79,000க்கும் குறைவாக இருக்கக்கூடாது. அதேபோல், அதிகபட்சமாக 1 லட்சத்து 89ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்துள்ளது. ஏப்ரல் 2015 இல் சமர்ப்பிக்கப்பட்ட முந்தைய அறிக்கையில், இளங்கலை நான்கு ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான அதிகபட்ச கட்டணம் ஆண்டுக்கு ரூ 1.44 லட்சம் முதல் ரூ 1.58 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பட்ட கட்டணத்தை அமல்படுத்த கல்வி அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல் தேவைப்படும் என கூறப்படுகிறது.

குறைந்தபட்ச கட்டணம் இல்லாததன் காரணமாக, பல ஆண்டுகளாக தனியார் பொறியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணத்திற்கு குறைந்த வரம்பை நிர்ணயம் செய்யும்படி ஏஐசிடிஇ-யிடம் மனு அளித்து வருகின்றன. ஏனென்றால், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறைக்கு மாறான குறைந்தபட்ச கட்டண வரம்புகளை நிர்ணயிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது, அன்றாட செயல்பாட்டுக்கான செலவை சிக்கலாக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, குறைந்தபட்சக் கட்டணங்களுக்கான உச்சவரம்புடன், கட்டணக் கட்டமைப்பை புதிதாக மறுசீரமைக்குமாறு ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியிடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. புதிய பரிந்துரைகளின்படி, பொறியியல் (டிப்ளமோ) மற்றும் பயன்பாட்டு கலை படிப்புகளுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1.4 லட்சமும், குறைந்தப்பட்சமாக ஆண்டுக்கு ரூ. 67 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுளளது.

முதுகலை பொறியியல் படிப்புகளில், அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச கட்டணம் முறையே ரூ.3.03 லட்சம் மற்றும் ரூ.1.41 லட்சம் என முன்மொழியப்பட்டுள்ளது.

AICTE சட்டத்தின் பிரிவு 10, கவுன்சில் "கல்வி மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நிர்ணயிக்கலாம்" என்று கூறுகிறது.

TMA Pai அறக்கட்டளை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொழில்நுட்பக் கல்வியை வணிகமயமாக்குவதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பரிந்துரைக்க ஸ்ரீகிருஷ்ணா குழு அமைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கல்வி வணிகமயமாக்கப்படுவதைத் தடுக்க, தேசிய அளவிலான கட்டண நிர்ணயக் குழு தனது பரிந்துரைகளை வழங்கும் வரை, தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணத்தை மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Engineering Aicte Education Ministry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment