பள்ளிகளை மேம்படுத்துவதில், பெற்றோர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், மாநிலத்தில் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளிலும்’ பள்ளி அளவிலான மேலாண்மைக் குழுக்களை மறுசீரமைக்க’ தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் 52 லட்சம் குழந்தைகளின் பெற்றோருக்கு மார்ச் 20ம் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி மார்ச் 20 ஞாயிற்றுக்கிழமை அன்று, அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில்’ பெற்றோர்களுடன் கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெற இருப்பதால், அரசுப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
“கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் உருவாக்கப்பட்ட பள்ளி நிர்வாகக் குழுக்களை மாநில அரசு சீரமைத்து வருகிறது. 20 பேர் கொண்ட குழுவிற்கு ஒரு பெற்றோர் தலைமை தாங்குவார், மேலும் ஒரு சிறப்பு குழந்தையின் பெற்றோர் துணைத் தலைவராக இருப்பார். தன்னார்வலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்களும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் தனிப்பட்ட பள்ளிகளுக்கான’ பள்ளி மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கான மொபைல் செயலியை அவர் தொடங்கி வைத்தார். மாணவர்களின் சேர்க்கை, மாணவர்களைத் தக்கவைத்தல், உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல் போன்ற தகவல்களைச் சேகரிக்கவும் சரிபார்க்கவும் இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும்.
இதுதொடர்பாக ராப்பர் அறிவு பாடிய பிரச்சாரப் பாடல் ஒன்றையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“