/tamil-ie/media/media_files/uploads/2020/08/Tamil-News-Today-Live-Government-school-admission.jpg)
Partial opening of schools for Class 9 to 12
செப்டம்பர் 21-ம் தேதியிலிருந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பெறுவதற்கு தாங்கள் விருப்பப்பட்டால், பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் முடக்கநிலை நீக்கத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதில் செப்டம்பர் 30 வரையில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். இருப்பினும் , கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் மட்டும், செப்டம்பர் 21 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு, தங்கள் விருப்பத்தின் பேரில் நேரில் பள்ளிக்கூடங்களுக்கு வர அனுமதிக்கலாம் என்று தெரிவித்தது.
இந்நிலையில், 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களை அனுமதிக்கும் பள்ளிகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தொடர்பான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்:
- முடிந்தவரை குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை பின்பற்ற வேண்டும்.
- ஃபேஸ் கவர்கள் / முகக்கவச உறையை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- குறைந்தது 40-60 நொடிகள் அடிக்கடி கை கழுவுதல் வேண்டும்
- குறைந்தது 20 நொடிகள் ஆல்கஹால் அடிப்படையிலான கை கழுவும் திரவங்களை கொண்டு கை கழுவுதல் வேண்டும்
- சுவாசம் தொடர்பான விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவது ஆகியவற்றை உறுதி செய்யவேண்டும். இருமும் போதும், தும்மும் போதும் நம் வாயையும் மூக்கையும் கைக்குட்டை/மெல்லிழைக் காகிதம் (tissue Paper) கொண்டு மூடிக் கொள்வது, பயன்படுத்தப்பட்ட மெல்லிழைக் காகிதத்தை முறையாக அப்புறப்படுத்துவது போன்ற நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும்.
- அனைவரும் சுயமாக ஆரோக்கியத்தை கண்காணித்தல் நோய் அறிகுறி தென்பபட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்தல்.
- எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது .
- ஆரோக்யா சேது செயலியை சாத்தியமான இடங்களில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பள்ளிகள் பின்வரும் ஏற்பாடுகளை உறுதிப்படுத்த வேண்டும்:
ஆன்லைன் / தொலைதூரக் கல்வி தொடர்ந்து அனுமதிக்கப்படும், ஊக்குவிக்கப்படும்.
கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் மட்டும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கு, தங்கள் விருப்பத்தின் பேரில் நேரில் பள்ளிக்கூடங்களுக்கு வர அனுமதிக்கலாம். அவர்களின் பெற்றோர்/ காப்பாளர் எழுத்துபூர்வமாக ஒப்புதல் அளிப்பதன் அடிப்படையில் மட்டுமே இதை அனுமதிக்க வேண்டும்
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவார்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாகப் பயன்படுத்தப்பட்ட பள்ளிகள், மீண்டும் தொடங்குவதற்கு முன்பு முறையாக சுத்திகரிக்கப்பட வேண்டும்.
வானிலை அனுமதித்தால், மாணவர்கள், ஆசிரியர்களின் கலந்துரையாடல் வெளிப்புற இடங்களிலும் நடைபெறலாம். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக விலகல் நெறிமுறைகளையும் பள்ளி நிர்வாகம் உறுதி படுத்த வேண்டும்.
கூட்டத்திற்கு வழிவகுக்கும் விளையாட்டு மற்றும் இதர பள்ளி நிகழ்வுகள் தடைசெய்யப்படுகின்றன.
ஏசியின் குறைந்தபட்ச வெப்பநிலையை 24 - 30 டிகிரி செல்சியஸாகவும், ஈரப்பதம் 40-70% வரம்பில் இருக்க வேண்டும்.
பள்ளிகளின் நுழைவாயிலில் சானிட்டைசர் டிஸ்பென்சர், வெப்பநிலை சோதனை ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
அறிகுறியற்ற நபர்கள் (ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்) மட்டுமே வளாகத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு ஆசிரியர் / பணியாளர் / மாணவர் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டால், அவர் / அவள் அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.