/indian-express-tamil/media/media_files/2025/09/22/dpi-3-2025-09-22-06-13-59.jpg)
உடற்கல்வி ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியலை அனுப்ப பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (Chief Educational Officers - CEO) முக்கிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 (Physical Education Director Grade-II) ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, 2025 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி, பதவி உயர்வு பெறத் தகுதியுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயார் செய்து உடனே அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சுற்றறிக்கையில் சில கடுமையான வழிகாட்டுதல்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன:
இந்தப் பட்டியலில், இளநிலையில் இரட்டைப் பட்டப் படிப்பு (Double Degree) படித்தவர்களின் பெயரைச் சேர்க்கக் கூடாது. பட்டியலில் இடம்பெற்று உள்ள ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை (Disciplinary Action) ஏதேனும் நிலுவையில் இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கூர்ந்​தாய்வு செய்ய வேண்​டும்.
பட்டியலைத் தயாரிக்கும்போது விதிமுறைகளுக்கு முரணாகச் செயல்பட்டால், சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முழுப் பொறுப்பை ஏற்க நேரிடும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. விதி​முறை​களுக்கு முரணாக யாருடைய பெயராவது சேர்க்கப் பரிந்​துரைத்​தாலோ, அல்லது தகுதியானவரின் பெயர் விடுபட்டதாகத் தெரிவித்து முறை​யீடு ஏதும் பின்​னர் பெறப்​பட்​டாலோ, அதற்கு சம்​பந்​தப்​பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே முழுப் பொறுப்பாவார். எனவே, இந்த விவ​காரத்​தில் கூடுதல் கவனத்துடன் செயல்​படுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us