பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணியில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனங்களாக நிரப்பப்படும். தகுதியுள்ளவர்கள் 20.12.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno - Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 07
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,600 – 65,500
தட்டச்சர் (Typist)
காலியிடங்களின் எண்ணிக்கை : 04
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,500 – 62,000
வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/SCA/ST மற்றும் DW (ஆதரவற்ற விதவை) பிரிவனரில் 35 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20-%20FOR%20THE%20TEMPORARY%20POST%20OF%20STENO-TYPIST%20AND%20TYPIST%20IN%20PERAMBALUR%20DISTRICT%20JUDICIARY%20-%20DATED%2004-12-2021_0.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2021
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20-%20FOR%20THE%20TEMPORARY%20POST%20OF%20STENO-TYPIST%20AND%20TYPIST%20IN%20PERAMBALUR%20DISTRICT%20JUDICIARY%20-%20DATED%2004-12-2021_0.pdf என்ற இணையத்தளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil