/indian-express-tamil/media/media_files/2025/06/22/tn-govt-jobs-2025-06-22-15-35-37.jpg)
பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு அலுவலர் மற்றும் நன்னடத்தை அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பாதுகாப்பு அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநல மருத்துவம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 27,804
சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: எல்.எல்.பி பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 27,804
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://perambalur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபா வளாகம் எண்: 106F/7, தரைத்தளம், அன்னை நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, பெரம்பலூர் - 621212
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.09.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.