/tamil-ie/media/media_files/uploads/2021/09/periyar-university.jpg)
பெரியார் பல்கலைக்கழகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்பு துறை திட்டத்தின் கீழ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2021.
திட்ட ஒருங்கிணைப்பாளர் (Project/ Field Coordinator)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 01
கல்வித் தகுதி : முதுகலை படிப்புடன் M.Phil. in உளவியல்/சமூகவியல்/சமூகப்பணி (Psychology/ Sociology/ Social Work) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,000
திட்ட உதவியாளர் (Project/ Field Assistants)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 04
கல்வித் தகுதி : முதுகலை Psychology/ Sociology/Social Work படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 12,000
தேர்வு முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுய விவரம் அடங்கிய BIO-DATA வை தேவையான ஆவணங்களுடன் சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி,
Principal Investigator- DCW Project Professor & Head Department of Psychology Periyar University Salem- 636 011.
அல்லது மின்னஞ்சல் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி : kadhir1971@periyaruniversity.ac.in
தகுதியுள்ளவர்கள் 27.09.2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இந்த அறிவிப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.periyaruniversity.ac.in/Documents/2021/Advt/Psychology.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.