பெ…ரிய காத்திருப்பிற்கு பிறகு வெளியாகும் பெரியார் தேர்வு ரிசல்ட்

Periyar University Result 2019-2020 UG, PG Live Updates: பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Periyar University Result 2019, Periyar Maniammai University Result 2019
Periyar University Result 2019, Periyar Maniammai University Result 2019

Periyar University UG, PG Results 2019 : பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள், பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம்.

Periyar University Results 2019 Live: Periyar UG, PG November 2019 Result @periyaruniversity.ac.in

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ரிசல்ட்: எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் மாணவர்கள்

பெரியார் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டில் முக்கிய பல்கலைக்கழகம்! இது சேலத்தை மையமாகக் கொண்டு இயங்குகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இதன்கீழ் இயங்குகின்றன. 2015ம் ஆண்டு நடைபெற்ற தேசிய தர மதிபீட்டுக் குழு ஆய்வின் அடிப்படையில் தற்பொழுது A அங்கிகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Live Blog

Periyar University Results 2019 updates : பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.


12:39 (IST)02 Jan 2020

பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் குரூப் I தேர்விலும் கவனம் செலுத்தலாம்.

பெரியார் பல்கலைக்கழக  தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் I தேர்வுக்கான நேற்றைய அறிவிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.    

மிகவும்  மதிப்பு வாய்ந்த தேர்வாகக் கருதப்படும் குரூப் I, 2020 தேர்வு குறித்த அறிவிப்பை நேற்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி குரூப் I ப்ரிலிம்ஸ் தேர்வு நடத்தப்படும் . 

விண்ணப்ப செயல்முறை இந்த மாதம் 20ம் தேதியில் தொடங்கி, அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெறும். 

மாணவர்களே,  இறுதி ஆண்டு பட்டப்படிப்பு தேர்வை எழுதிய மாணவர்களும் குரூப்  I தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டம் பெற்றதற்கான ஆதாரத்தை மாணவர்கள் குரூப் I மெயின்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்தால் போதுமானது.   

11:15 (IST)02 Jan 2020

நீங்கள் குடிமைப் பணி தேர்வு எழுத வேண்டும் என்றால்:(2/2)

யுபிஎஸ்சி போன்ற உயரிய தேர்வுகளில்  நடுத்தர கல்வி பின்னணியைச் சேர்ந்த பல யுபிஎஸ்சி ஆர்வலர்கள், தங்கள் இலக்கணம், வாக்கிய அமைப்பு, சொல்லகராதி,  போன்றவைகளை மற்றவர்களுடன் இணையாக இருக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

யுபிஎஸ்சி தேர்வுக்கு ஆங்கிலம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை தீர்க்க, இங்கே கிளிக் செய்யுங்கள்

11:12 (IST)02 Jan 2020

நீங்கள் குடிமைப் பணி தேர்வு எழுத வேண்டும் என்றால்:

யுபிஎஸ்சி தேர்வுகளில்  வெற்றி ஈட்ட, தமிழ் நாட்டை சேர்ந்த பட்டதாரி/முதுநிலை பட்டதாரிகட்கு தமிழக அரசு, கட்டணம் ஏதுமின்றி,  ஆறுமாத கால உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கிறது . இப்பயிற்சி சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ‘அகில இந்திய குடுமைப்பணித்  தேர்வு பயிற்சி மையத்தில்’ அளிக்கப்படும். 

civilservicecoaching.com என்ற இணையதளத்திற்கு சென்று இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 2020-21 பயிற்சிகான  நுழைவு தேர்வு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.   

11:03 (IST)02 Jan 2020

பெரியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் குறித்த முக்கிய விவரங்கள் (2/2)

பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் எஸ்எஸ்சி தேர்வில் கலக்கலாம்:  

எஸ்எஸ்சி சிஜிஎல் (CGL) 2020, சிஎச்எஸ் (CHS)2020 தேர்வு தேதி அறிவிப்புகள் முறையே செப்டம்பர் 15 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் வெளியிடப்படுகிறது. எவ்வாறாயினும்,தேர்வுக்கான  தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

10:59 (IST)02 Jan 2020

பெரியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் குறித்த முக்கிய விவரம் :

பெரியார் பல்கலைக்கழக  தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில், பல்கலைக்கழகத்தின் வாயிலாக கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு முக்கிய அரசு தேர்வுகளுக்கு தயார் செய்ய தொடங்குகள் .

இந்த ஆண்டு நீங்கள் தயார் செய்ய வேண்டிய அரசு பணிகள் குறித்த முழு விவரம் பின் வருமாரு: 

ஜனவரி 8 ஆம் தேதி, யுபிஎஸ்சி என்டிஏ (தேசிய பாதுகாப்பு பயிற்சி) 2020-ம் ஆண்டு தேர்வு அறிவிப்புகளை வெளியிடும். விண்ணப்பங்கள் ஜனவரி 29 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்வு ஏப்ரல் 19 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

பிப்ரவரி 12 ஆம் தேதி, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மற்றும் யுபிஎஸ்சி இந்திய வன சேவைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இரு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களும் மார்ச் 3 ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேர்வுகள் 2020ம் ஆண்டு மே 31ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டில் 3 லட்சம் பணிகள் ரயில்வே மூலம் நிரப்பப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர்  கோயல் தெரிவித்தார்

10:38 (IST)02 Jan 2020

Periyar University UG Result Live Updates : தேர்வு முடிவுகளை காண பதிவு எண், பிறந்த தேதி மிக முக்கியம்

தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை காண,  பதிவு எண், பிறந்த தேதி  மனபாடத்தில் இருக்க வேண்டும்.  இவை இல்லாமல் முடிவுகளைக் காண முடியாது. அதே நேரத்தில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை காண இருப்பதால், பல்கலக்கழகத்தின் சர்வர் அதிக ஓவர்லோடு ஆகலாம் என்றும், இதனால்  முடிவுகளைப் பார்க்க அதிக நேரம்  எடுக்கும் என்று கூறப்படுகிறது 

10:02 (IST)02 Jan 2020

Periyar University UG Result Live Updates : இன்னும் எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை

பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் கிடைத்த தகவல்களின் படி இன்று மாலைக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதே. ஆனால், பெரியார் பல்கலைக்கழகம் சார்பாக இன்னும் எந்த அதிகாரப்பூர்வ  அறிக்கையும் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவது ஒரு பல்கலைக்கழகத்தின் கடமை என்றும், இன்னும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்  மாணவர்களை பிரதிபலிக்கவேண்டும் என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.      

08:36 (IST)02 Jan 2020

Periyar University UG Result Live Updates : இன்று முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தது போல்  நேற்று வெளியாக வில்லை. ஆனால், இன்று எந்நேரமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்வர்கள், தங்கள் தேர்வின் முடிவை பார்க்க தயாராக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.      

19:19 (IST)01 Jan 2020

தேர்வு முடிவு இன்றே வெளியாகுமா? தள்ளிப் போகுமா?

இரவு 7 மணியைத் தாண்டியும் பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் குறித்து அதிகாரபூர்வ தகவல் இல்லை. எனினும் இரவு 8 மணி அளவில்கூட தேர்வு முடிவுகளை அறிவிக்கும் வழக்கம் உண்டு என்பதால் மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

தேர்வு முடிவு இன்றா, நாளையா? என்பது சற்று நேரத்தில் தெரிய வரலாம். பல்கலைக்கழகத்தை இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை

18:45 (IST)01 Jan 2020

இரவு 8 மணிக்குள் ரிசல்ட்??

மாலை 6 மணிக்கு மேல் முடிவுகள் வெளியாகும் என நாம் முன்பே அறிவித்திருந்த நிலையில், இன்று இரவு 8 மணிக்குள் பெரியார் பல்கலைக்கழகத்தின் யுஜி, பிஜி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

17:35 (IST)01 Jan 2020

இன்று மாலைக்குள் ரிசல்ட்

இன்று மாலைக்குள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் யுஜி, பிஜி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

15:53 (IST)01 Jan 2020

தேர்வு விண்ணப்பம் வெளியீடு

டிச 2019 – Ph.D Common Entrance தேர்வு விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. 

அப்ளை செய்வதற்கு இங்கே க்ளிக் செய்யவும்

15:07 (IST)01 Jan 2020

Periyar University UG Result Live Updates: முடிவுகள் எப்போது?

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் யுஜி, பிஜி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், பிறப்கல் 3 மணி வரை வெளியாகவில்லை. இன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14:18 (IST)01 Jan 2020

தற்போது வரை எந்த அறிவிப்பும் இல்லை

பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவு தொடர்பாக தற்போது வரை அதன் இணையதளத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும் இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    

14:14 (IST)01 Jan 2020

தேர்வு முடிவுக்கு பின் கடைபிடிக்கும் வழக்கமான நடைமுறை

மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் கல்லூரியில் விண்ணப்பங்களைப் பெற்று, முதல்வர் வாயிலாகத் தேர்வாணையர் அலுவலகத்திற்கு, தேர்வு முடிவுகள் வெளியான, 10 நாட்களுக்குள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். இது வழக்கமான நடைமுறையாகும்.  

14:13 (IST)01 Jan 2020

முடிவுகள் இன்று, முழுமையான மதிப்பெண் பட்டியல் பின்னர் கிடைக்கும்

பெரியார் பல்கலைகழகம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருக்கின்றன. தேர்வர்களின் முழுமையான மதிப்பெண் பட்டியல்  பின்னர் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இந்த மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.    

13:10 (IST)01 Jan 2020

பெரியார் பல்கலைக்கழகம் PRIDE பிராக்டிக்கல் தேர்வு அட்டவணை வெளியீடு

பெரியார் பல்கலைக்கழகத்த்தின் தொலைதூர கல்விக்கான பிராக்டிக்கல் தேர்வு  அட்டவணை வெளியாகியுள்ளது. 

தேர்வு தேதி பற்றிய முழு விவரங்களை இங்கே, கிளிக் செய்யவும்  

12:15 (IST)01 Jan 2020

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் எப்போது?

பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் இன்று முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், பல்கலைக்கழக   தொலைபேசி எண்களை மாணவர்கள் அழைத்தபோது, போதுமான பதில்கள் தரப்படவில்லை என்று கூறி வருகின்றனர்.  எனவே,  இன்று தேர்வு முடிவுகள் வெளியாகுமா?  என்ற குழப்பமும் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் சார்பாகவும்  பல்கலைக் கழகத்தை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம் . 

11:38 (IST)01 Jan 2020

டிஎன்பிஎஸ்சி குரூப் – I நோட்டிபிகேஷன் வெளியானது.

டிஎன்பிஎஸ்சி குரூப் I 2020  தேர்வுக்கான அதிகாரப்பூர்வ சற்று முன்பு வெளியாகியுள்ளது. இந்த  மாதம் 20ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 19ம் தேடி வரை தேர்வர்கள் விண்ணபிக்கலாம்.    குரூப்  I முதல்நிலை தேர்வு ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

11:15 (IST)01 Jan 2020

பெரியார் பல்கலைக்கழகத்துடன் 106  கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.  

பெரியார் பல்கலைக்கழக சட்டம் 1997 இன் விதிகளின்படி,  1997ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு நிறுவியது. சேலம், நமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியது  இந்த  பல்கலைக்கழகம் .  எம்.எச்.ஆர்.டி என்.ஐ.ஆர்.எஃப் 2019 ம் ஆண்டின் சிறந்த பல்கலைக்கழகம் தரவரிசையில்  68 வது இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அறிவால் விளையும் உலகு’ என்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் பெரியார் பல்கலைக்கழகத்துடன் 101  கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.  

09:52 (IST)01 Jan 2020

பெரியார் பல்கலைக்கழக தளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை:

1.மேற்கண்ட அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நுழையவும்.

2.முகப்பு பக்கத்தில், ‘ரிசல்ட்’ என்கிற இடத்தில் ‘க்ளிக்’ செய்யவும்.

3. புதிய பக்கம் வெளிப்படும்.

4.பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.

5. ‘submit’ பகுதியில் ‘க்ளிக்’ செய்யவும்.

6. ரிசல்ட் தெரிய வரும்.

7.ரிசல்டை பார்ப்பதுடன், ரிசல்டை சேமித்து வைத்துக்கொள்ளலாம்

09:24 (IST)01 Jan 2020

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 1, 3, 5 என ஒற்றைப் படை எண் செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர்/நவம்பரில் நடைபெறுவது வழக்கம். இரட்டைப் படை எண் செமஸ்டர் (2, 4, 6) தேர்வுகள் மார்ச்/ஏப்ரலில் நடைபெறும். அந்த வகையில் 2019 அக்டோபர்/ நவம்பரில் நடைபெற்ற ஒற்றைப்படை எண் வரிசை செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகளையே மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

Periyar University Results 2019 updates : தேர்வில் கலந்து கொண்ட தேர்வர்கள், பெரியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை காணலாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழும் இது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வெளியிட இருக்கிறது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Periyar university results 2019 live updates periyar university 2019 ug results latest news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com