Periyar University UG, PG Results 2019 Today Coverage: ஒருவார காத்திருப்புக்கு பிறகு சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. ஒவ்வொரு ஆண்டும் 1, 3, 5 என ஒற்றைப் படை எண் செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர்/நவம்பரில் நடைபெறுவது வழக்கம். இரட்டைப் படை எண் செமஸ்டர் (2, 4, 6) தேர்வுகள் மார்ச்/ஏப்ரலில் நடைபெறும். அந்த வகையில் 2019 அக்டோபர்/ நவம்பரில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகளை பெரியார் பல்கலைக் கழக மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். கடந்த ஒரு வாரமாகவே எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த செமஸ்டர் முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
Periyar University Results 2019 Live: Periyar UG, PG November 2019 Result @periyaruniversity.ac.in
தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது ?
பெரியார் பல்கலைக்கழக தளமான periyaruniversity.ac.in -ல் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். தேர்வர்களின் முழுமையான மதிப்பெண் பட்டியல் பின்னர் வெளியிடப்படும். தேர்வர்கள் தங்கள் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இந்த மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
Live Blog
Periyar University Results 2019 updates : பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் தொடர்பான அனைத்து முக்கிய செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழும் இது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வெளியிட இருக்கிறது.
Highlights
இரவு 9 மணி வரை பெரியார் பல்கலைக்கழக ரிசல்ட் வெளியாகவில்லை. இன்று வெளியாகும் என ஏற்கனவே பலகலைக்கழகம் தரப்பில் அதிகாரபூர்வமற்ற முறையில் கூறப்பட்டிருந்தது. எனவே இரவு தாமதம் ஆனாலும் ரிசல்ட் வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. பல்கலைக்கழகம் சார்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பெரியார் பல்கலைக்கழக ரிசல்ட் இன்று இரவு வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. பல்கலைக்கழகம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை. எனினும் இரவில் வெளியாகும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை என பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறுகின்றன.
பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி பயில எண்ணும் மாணவர்கள், மொத்த எத்தனை கோர்ஸ்கள் இருக்கிறது என்பதை இங்கே க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
இதோ, அதோ என்று யுஜி, பிஜி தேர்வு முடிவுகள் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்க, இன்றிரவு 8 மணிக்குலினக்ஸ் ரிசல்ட் வெளிவருவது குறித்த முக்கிய தகவல் வெளியாகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகள் குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது வெளியிட்டால் சர்வர் ஓவர்லோடு ஆகும் என்பதால், சிறிது நேரத்திற்கு பிறகு வெளியிடப்படலாம் என்று உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பரில் நடத்தப்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு ( http://www.periyaruniversity.ac.in) சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று மதியம் 3 மணி யளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், இது குறித்த எந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது. மாணவர்கள் , இணையதளத்தை தொடர்ந்து நோட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெரியார் பல்கலைக் கழகத்தின் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 3 மணிக்கு மேல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியார் பல்கலைக் கழகத்தின் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கிடையே இன்று மதியம், அல்லது மாலை நேரத்தில் ரிசல்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்கள் தொடர்ந்து அந்த பல்கலைக்கழகத்தின் வலைதளத்தை விசிட் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.
பெரியார் பல்கலைக் கழக தேர்வு முடிவை அறிய வெளியூர் மாணவர்கள் அலைமோதிக் கொண்டிருக்கிறார்கள். பல்கலைக்கழக தொலைபேசிக்கு ஓய்வில்லாமல், ஃபோன் செய்தும் விசாரித்து வருகிறார்கள். இருப்பினும் மாணவர்கள் வலைதளத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று எத்தனை மணிக்கு வெளியாகும் என்பதை பல்கலைக் கழக தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் மாணவர்கள்.
இளங்கலை, முதுகலை தேர்வுகளின் முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்குப் பிறகு வெளியிடப்படும். “அறிவிப்பு வந்தவுடன் வலைத்தளம் மெதுவாக செல்லக்கூடும். அதனால் மாணவர்கள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை அறிவிப்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு முறையான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் ஊடக அறிக்கைகள் பல்கலைக் கழக கட்டுப்பாட்டாளர் கூறியதை மேற்கோளிட்டிருந்தன.
பெரியார் பல்கலைக்கழக முடிவு நேரத்தை காலை 11:00 மணிக்குப் பிறகு மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இன்று பெரியார் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பல்கலைக் கழக கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளதால், இன்று காலை முதலே மாணவர்கள், எதிர்பார்ப்பில் உள்ளனர். நேரம் அறிவிக்கப்படாததால், எப்போது வேண்டுமானாலும் முடிவுகள் வெளியாகும் என்ற பதட்டமும் அவர்களை சூழ்ந்திருக்கிறது.
கடந்த சில தினங்களாக பெரியார் பல்கலைக் கழக தேர்வு முடிவுகள் வெளியாவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் தேர்வெழுதிய மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். தொடர்ந்து பெரியார் பல்கலைக் கழக வலைதளத்தை அடிக்கடி ‘விசிட்’ செய்தனர்.
பெரியார் பல்கலைக்கழக யுஜி மற்றும் பிஜி முடிவுகள் ஜனவரி 6-ம் தேதி அறிவிக்கப்படலாம் என்று பல்கலைக் கழக கட்டுப்பாட்டாளர் எஸ்.காதிரவன் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக் கழக அதிகாரப்பூர்வ போர்ட்டலில் தெரிந்துக் கொள்ளலாம்.
periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தை க்ளிக் செய்யவும். அதன் முகப்பு பக்கத்தில் UG/PG result November 2019 என்பதை கிளிக் செய்யவும். அதில் புதிய பக்கம் ஒன்று திறக்கப்படும். பின் உங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து க்ளிக் செய்யவும். இப்போது உங்களது தேர்வு முடிவுகள் தெரிய வரும்.
பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்தாண்டு நவம்பரில் இளங்கலை. முதுகலை பட்ட படிப்பிற்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவுகளை கடந்த ஒரு வாரமாகவே மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகத்தில் 28 துறைகள் மற்றும் 101 இணைவு கல்லூரிகள் உள்ளன. இவற்றின் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் நிலையில், அதனை periyaruniversity.ac.in ல் மாணவர்கள் உடனே தெரிந்துக் கொள்ளலாம்.
பெரியார் பல்கலைக்கழகம் இன்று இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளுக்கான, முடிவுகள் இன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை periyaruniversity.ac.in ல் தெரிந்துக் கொள்ளலாம்.