Periyar University Result 2020 : சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை periyaruniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. April 2020 UG - Arts Examinations Results, April 2020 PG Examinations Results, April 2020 UG-Science Examinations Results போன்றவைக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
Advertisment
செமஸ்டர் தேர்வு முடிவுகளை எப்படி செக் செய்வது?
1.periyaruniversity.ac.in அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் நுழையவும்.
2.முகப்பு பக்கத்தில், April 2020 UG - Arts Examinations Results, April 2020 PG Examinations Results, April 2020 UG-Science Examinations Results போன்ற இணைப்புகளில் ஒன்றை‘க்ளிக்’ செய்யவும்.
3.பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்யவும்.
4. ‘summit’ பகுதியில் ‘க்ளிக்’ செய்யவும்.
5. ரிசல்டை பார்ப்பதுடன், ரிசல்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதற்கிடையில், பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் (PRIDE) பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள், தேர்வுகளுக்கு விண்ணப்ப செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் . தேர்வர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பெரியார் பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அடல் தரவரிசை (ARIIA) 2020 பட்டியலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள் பிரிவில் நான்காவது இடத்தைப் பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil