மாற்றுத் திறனாளிகளுக்கு இத்தேர்வு கிடையாது. தாங்கள் உடற்தகுதி தேர்விற்கு தேர்வாகியிருக்கிறோமா என்பதை அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பதாரர்கள் தெரிந்துக் கொள்ளலாம். இதற்கு பதிவெண்ணும், பிறந்த தேதியும் அவசியம்.
உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மெடிக்கல் ஃபிட்னெஸ் ஆகியவற்றிற்குப் பிறகு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.
உடற்தகுதி தேர்வு
ஆண்கள் – 35 கிலோ எடையை, கீழே வைக்காமல் தூக்கிக் கொண்டு, 100 மீட்டரை 2 நிமிடத்தில் அடைய வேண்டும். 1000 மீட்டரை 4 நிமிடம் 15 வினாடிகளுக்குள் ஓடி கடக்க வேண்டும்.
பெண்கள் – 20 கிலோ எடையை, எங்கும் வைக்காமல் தூக்கிக் கொண்டு, 100 மீட்டரை 2 நிமிடத்தில் அடைய வேண்டும். 1000 மீட்டரை 5 நிமிடம் 40 வினாடிகளுக்குள் ஓடி கடக்க வேண்டும்.
RRB group D: சான்றிதழ் சரிபார்ப்பு
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு சான்றிதழ். NCVT/SCVT சான்றிதழ், SC/ST சான்றிதழ் அவசியம். அதோடு, ஆதார் கார்டு, முந்தைய வேலையிலிருந்து வெளியேறிய சான்றிதழ், NOC சான்றிதழ் ஆகியவைகளும் கட்டாயம் தேவை. தவிர, மூன்றாம் பாலினத்தவர் சான்றிதழ், வாழ்க்கை துணை இறப்பு மற்றும் விதவை சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினருக்கான சான்றிதழ் ஆகியவைகளும் சமர்பிக்க வேண்டும்.
தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து, ஆர்.ஆர்.பி இறுதி பட்டியலை வெளியிடும்.