பி.ஹெச்.டி செய்ய விருப்பமா? தெரிந்து கொள்ள வேண்டிய 5 ஃபெல்லோஷிப் இங்கே

உயர் மட்ட ஆராய்ச்சியைத் தொடரும் மாணவர்களை ஊக்குவிக்க, பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பிஎச்.டி உதவித்தொகையை வழங்குகின்றன

எந்தவொரு துறையிலும் மிக உயர்ந்த சாதனைகளில் ஒன்றாக பி.ஹெச்.டி பட்டம்  கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பாடத்தின் ஆழமான அறிவையும், புரிதலையும் சேகரிக்க விரும்பும் ஒரு முதுகலை மாணவர் பிஎச்டி பட்டம் பெறலாம்.

பொதுவாக, ஒரு பி.ஹெச்.டி பட்டத்தை முடிக்க ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.  இதனால், பலரும் தங்கள்  பி.ஹெச்.டி கனவை முற்றிலும் கைவிடும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பி.ஹெச்.டி உதவித்தொகையை வழங்குகின்றன.

ஜவஹர்லால் நேரு நினைவு நிதி உதவித்தொகை

இந்தியாவில் முதுகலை மாணவர்களின் பி.ஹெச்.டி படிப்பை ஊக்குவிப்பதற்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி  பெற்ற மாணவர்கள், இளநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் பி.எச்.டி செய்திட  வேண்டும். மாணவர்களின் வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வழங்குநர்: ஜவஹர்லால் நேரு நினைவு நிதி

தகுதி: 35 வயதுக்குட்பட்ட பி.ஹெச்.டி மாணவர்கள்

உதவித் தொகை : மாதத்திற்கு ரூ .18,000 வழங்கப்படுகிறது

விண்ணப்ப காலக்கெடு: டிசம்பர் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (மாறக்கூடியது)

Physical Research Laboratory Junior Research Fellowship (இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்) : 

வானியல், வானியற்பியல், விண்வெளி மற்றும் வளிமண்டல அறிவியல், சூரிய இயற்பியல், ஒளியியல் , அணு மற்றும் மூலக்கூறு இயற்பியல், தத்துவார்த்த இயற்பியல், வானியல் வேதியியல், புவி அறிவியல் போன்ற துறைகளில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பி.எச்.டி பட்டம் பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கிறது.

அறிவியல், பொறியியலில் பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு  இளங்கலை/முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சி.எஸ்.ஐ.ஆர்-யு.ஜி.சி, நெட்-ஜே.ஆர்.எஃப்,கேட் தேர்வு போன்ற தேர்வுகளில் போட்டியிட்டிருக்க வேண்டும்.

உதவித் தொகை வழங்குபவர்: இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், இந்திய அரசு

தகுதி: பி.ஹெச்.டி விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வெகுமதிகள்: மாதத்திற்கு ரூ .35,000 வரை

விண்ணப்ப காலக்கெடு: ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் (மாறக்கூடியது)

யுஜிசி-நெட் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்

அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனங்களில் மாணவர்கள் பி.ஹெச்.டி படிப்புகளைத்  தொடர ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய அளவிலான யுஜிசி-நெட் தேர்வு நடைபெறுகிறது.  இந்த தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் அறிவியல், மனிதநேயம் , சமூக அறிவியல் தொடர்பான துறைகளில் ஃபெல்லோஷிப் பெறுகிறார்கள். மாணவர்கள் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். .

வழங்குநர்: பல்கலைக்கழக மானியக் குழு  (யுஜிசி)

தகுதி: மனிதநேயம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை : மாதத்திற்கு ரூ .14,000,

விண்ணப்ப காலக்கெடு: மார்ச் மற்றும் ஏப்ரல் இடையே (ஜூன் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் ), செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் (டிசம்பர் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் )

கூகுள் பி.எச்.டி. பெல்லோஷிப் திட்டம்  (இந்தியா )

கூகுள் நிறுவனத்தின் இந்த முயற்சி, அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பிஎச்.டி திட்டங்களைத் தொடரும் இளங்கலை/முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்களை ஆதரிக்கிறது.

இந்த உதவித்தொகை, குறிப்பாக கணினி அறிவியல் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில்  கொடுக்கப்படுகிறது .

வழங்குநர்: கூகுள்

தகுதி: இந்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டம் செய்யும் மாணவர்கள்

உதவித் தொகை : 4 ஆண்டுகளுக்கு 50,000 அமெரிக்க டாலர்

விண்ணப்ப காலக்கெடு: மார்ச் மற்றும் ஏப்ரல் இடையே (மாறக்கூடியது)

ஐ.சி.எச்.ஆர் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜே.ஆர்.எஃப்)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி திட்டத்தில் வரலாற்று ஆய்வுகளில் பிஎச்.டி  செய்யும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆன்லைன் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் செயல்திறனின் அடிப்படையில் மாணவர்கள் இந்த பெல்லொவ்ஷிப்பிற்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

வழங்குநர்: இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ICHR)

தகுதி: வரலாற்று ஆய்வுகளில் பிஎச்டி செய்யும் மாணவர்கள்

வெகுமதிகள்: மாதத்திற்கு ரூ .17,600 மற்றும்

விண்ணப்ப காலக்கெடு: நவம்பர் மற்றும் டிசம்பர் இடையே (மாறக்கூடியது)

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Phd program top 5 phd fellowship for phd students

Next Story
பள்ளிகள் எப்போது திறக்கும்? எப்படி செயல்படும்? மத்திய கல்வி அமைச்சர் பதில்mind games website pschool,in lockdown india covid 19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com