பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் செய்ய வெளிநாட்டினரை அனுமதிக்கும் பிலிப்பைன்ஸ் மருத்துவச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் பிலிப்பைன்ஸில் மருத்துவப் பயிற்சி பெற முடியும்.
ஆங்கிலத்தில் படிக்க: Philippines to allow students to practice medicine; how it will help Indians
இதனுடன், கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், நெறிமுறை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும், உலக மருத்துவக் கல்வியில் தீவு நாடான பிலிப்பைன்ஸ் போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்கும் மருத்துவக் கல்வி கவுன்சில் மற்றும் மருத்துவ நிபுணத்துவ ஒழுங்குமுறை வாரியத்தை உருவாக்குவதை இந்த திருத்தம் அறிமுகப்படுத்துகிறது.
2024 ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகளின்படி, 9665 இந்தியர்கள் உயர் கல்விக்காக பிலிப்பைன்ஸில் இருந்தனர். இந்த ஒழுங்குமுறை மாற்றம், பிலிப்பைன்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார் கேரியர் எக்ஸ்பெர்ட்டின் நிறுவனர் கவுரவ் தியாகி.
டிரான்ஸ்வேர்ல்டு எஜுகேரின் நிர்வாக இயக்குநரும், கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமியின் இயக்குநருமான காட்வின் பிள்ளை, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் கல்வி உறவுகளை மேலும் மேம்படுத்தும் திறன் கொண்ட இந்த திருத்தத்தை "சிறந்த மாற்றம்" என்கிறார்.
"பிலிப்பைன்ஸின் ஆங்கிலம் அடிப்படையிலான கற்பித்தல், அமெரிக்கா பாடத்திட்டத்தை ஒத்த பாடத்திட்டம் மற்றும் மலிவு கல்விக் கட்டணம் ஆகியவை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆர்வலர்களை ஈர்க்கின்றன. 64 அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பள்ளிகள் மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ படிப்புகளில், தரமான கல்வி மற்றும் மலிவு விலையில் அரிய கலவையை பிலிப்பைன்ஸ் வழங்குகிறது," என்று காட்வின் பிள்ளை கூறினார்.
வெளிநாட்டு படிப்புகளுக்கான ஆலோசகர்களின் கூற்றுப்படி, குறைந்த கல்விக் கட்டணம், தரமான கல்வி, அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் பட்டம், விரிவான மருத்துவப் பயிற்சி, ஆங்கிலம் கற்பிக்கும் மொழி மற்றும் காலநிலை காரணிகள் போன்ற காரணிகள் சர்வதேச மாணவர்களை, குறிப்பாக இந்தியர்களை பிலிப்பைன்ஸுக்கு ஈர்க்கின்றன. "வெளிநாட்டு மாணவர்களை நாட்டில் மருத்துவம் செய்ய அனுமதிப்பதன் மூலம், ஆர்வமுள்ள மருத்துவ நிபுணர்களுக்கான இடமாக பிலிப்பைன்ஸ் தனது இடத்தை வலுப்படுத்துகிறது" என்று ஒன்ஸ்டெப் குளோபலின் நிறுவனர் மற்றும் இயக்குனர் அரித்ரா கோசல் கூறினார்.
பிலிப்பைன்ஸுக்கு மட்டுமின்றி, சமீபத்திய திருத்தம் இந்திய மாணவர்களுக்கு பெரிய பலன்களைக் கொண்டுவரும், ஏனெனில் "அவர்கள் இப்போது ஒரு பெரிய சந்தையை அணுகலாம் மற்றும் பிலிப்பைன்ஸில் பயிற்சி செய்யும் போது உலகளாவிய சுகாதார அமைப்பில் நடைமுறை அனுபவத்தைப் பெறலாம். இந்தியாவுக்குத் திரும்புவதை சவாலாகக் கருதும் மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்,” என்று கௌரவ் தியாகி விளக்கினார்.
ரஷ்யா, உக்ரைன் மற்றும் சீனாவுடன், பிலிப்பைன்ஸ் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியைத் தொடரும் இந்திய மாணவர்களுக்கு ஒரு பிரபலமான தேர்வாக மாறும்.
முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பேசிய சில மருத்துவ மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு பெரிய நான்கு நாடுகளை ஏன் விரும்பவில்லை, அதற்கு பதிலாக பிலிப்பைன்ஸுக்கு ஏன் சென்றார்கள் என்று பகிர்ந்து கொண்டனர். தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பிலிப்பைன்ஸைத் தேர்ந்தெடுத்தார், ஏனெனில் பிலிப்பைன்ஸின், மலிவு விலையில் தரமான கல்வி. ஆதித்யா போன்ற மாணவர்களும் தேசத்தில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளனர். 2019-19 இல் 380 இல் இருந்து இப்போது 1200 ஆக உள்ளது.
பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு படிப்பு
பிலிப்பைன்ஸில், எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு ஆறு ஆண்டுகள் நீளமானது, கடைசி ஆண்டு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எந்த ஒரு சர்வதேச மாணவரும் என்.எம்.ஏ.டி (NMAT) தேர்வை எடுத்து எம்.டி (MD) படிப்பில் சேருவதற்குத் தகுதிபெறும் முன் முதலில் மூன்று-செமஸ்டர் பி.எஸ் (BS) படிப்பில் சேர வேண்டும். பி.எஸ் படிப்பை மேற்கொள்வதும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வில் (NMAT) போட்டி மதிப்பெண் பெறுவதும் மருத்துவப் படிப்புக்கான முன் நிபந்தனையாகும்.
தகுதியைத் தவிர, பிலிப்பைன்ஸில் உயர்கல்வி ஆணையம் (CHED) உள்ளது என்பதை இந்திய ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இது உயர்கல்வியைப் பார்த்துக்கொள்வதோடு, அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலையும் வெளியிடுகிறது.
டைம்ஸ் உயர்கல்வி தரவரிசை 2024 தரவுகளின்படி, பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் சாண்டோ டோமஸ் பல்கலைக்கழகம் முறையே 1201–1500 மற்றும் 1501+ ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில், மருத்துவ மற்றும் சுகாதார பிரிவின் கீழ், பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் 510-600 தரவரிசையில் உள்ளது, அதே நேரத்தில் சாண்டோ டோமஸ் 800-1000 தரவரிசையில் உள்ளது. சாண்டோ டோமாஸ் பல்கலைக்கழகம் ஆசியாவிலேயே மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும். உலக சுகாதார அமைப்பு (WHO), ECFMG மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களால் பிலிப்பைன்ஸ் மருத்துவப் பட்டங்கள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.