பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு மாணவர்களின் வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டன. அதனால், இந்த ஆண்டு பொதுத் தேர்வு பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பதற்றம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், மாணவர்களிடம் தேர்வுகள் பற்றி பிரதமர் மோடி 4வது முறையாக கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி கஷ்டமான பாடங்களை மாணவர்கள் எதிர்கொள்வது எப்படி என்று யோசனைகளை வழங்கினார். பொதுத் தேர்வுகளில் கஷ்டமான பாடங்களை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மோடி மாணவர்களுக்கு கூறிய ஐந்து முக்கிய விஷயங்களைக் கூறினார்.
- கஷ்டமான பாடங்களை எதிர்கொள்வது எப்படி?
எல்லா பாடாங்களையும் ஒரே அணுகுமுறை மற்றும் ஆற்றலுடன் எதிகொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிந்துரைத்தார். மிகவும் கடினமான பகுதியை உற்சாகமான மனதுடன் கவனித்து படிக்க வேண்டும். இது பாடம் ரொம்ப எளிதாக இருப்பதாக உணர்பவர்களை இன்னும் எளிதாக உணர வைக்கும் என்றும் பிரதமர் கூறினார். இப்போது பிரதமராகவும் அதற்கு முன்னர் முதல்வராகவும் இருந்தபோது காலையில் கடினமான பிரச்சினைகளை உற்சாகமான மனதுடன் சமாளிக்க விரும்பியதாகக் கூறினார்.
எல்லா பாடங்களிலும் திறமை மிக்கவர்களாக இருப்பது முக்கியமல்ல. மிகவும் வெற்றிகரமான ஆளுமைகள்கூட, குறிப்பிட்ட ஒரு பாடத்தில் உறுதியான பிடிப்பைக் கொண்டிருந்தார்கள். லதா மங்கேஷ்கர் அவருடைய வாழ்க்கை முழுவதும் இசையை பின்பற்றுவதே ஒரு எண்ணமாக இருந்தது என்று உதாரணம் கூறினார். ஒரு பாடம் கடினமானது என்று கூறுவது முடிவல்ல. கடினமான பாடங்களில் இருந்து ஒருவர் தப்பி வெளியேறக்கூடாது என்று பிரதமர் மோடி கூறினார்.
- மனப்பாடம் செய்யும் சக்தியை அதிகரிப்பது எப்படி?
ஒரு மாணவர் மனப்பாடம் செய்யும் திறனை அதிகரிப்பதற்கு டிப்ஸ் கேட்டு கேள்வி எழுப்பினார். பாடங்களை சிறப்பாக நினைவில் வைத்துக் கொள்ள, பிரதமர் மோடி, பாடங்களை ஈடுபாட்டுடன், உள்வாங்க வேண்டும். அதனுடன் ஒன்றி மனதில் காட்சிப்படுத்து பதியவைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறை கூறினார். மனதுக்குள் சிந்தனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் விஷயங்களை ஒருபோதும் மறக்க முடியாது. மனப்பாடம் செய்வதற்கு பதிலாக ஒருவர் உள்வாங்க வேண்டும் என்று கூறினார்.
- படிப்பைத் தாண்டி ஓய்வு
ஒருவர் ஓய்வான நேரத்தை பெறும்போது அதை அதிகம் மதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மாணவர்களிடம் கூறினார். ஓய்வு நேரத்தில் எல்லா நேரங்களையும் விழுங்விடும் ஆபத்தான விஷயங்களை தவிர்ப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். இந்த விஷயங்கள் புத்துணர்ச்சிக்கு பதிலாக உங்களை சோர்வடையச் செய்யும். புதிய திறன்களைக் கற்பதற்கு ஓய்வு நேரம் நல்ல வாய்ப்பு ஆகும். ஓய்வு நேரத்தை ஒரு நபரின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
4.தேர்வுகளின்போது பின்பற்ற வேண்டிய உத்திகள்
அமைதியான மனநிலையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். உங்கள் பதற்றங்களை எல்லாம் தேர்வு அறைக்கு வெளியே விட்டுவிட வேண்டும். தேர்வுக்கான தயாரிப்பு மற்றும் பிற கவலைகள் குறித்து பதற்றமடையாமல் பதில்களை சிறந்த முறையில் எழுதுவதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
5.தேர்வு முடிவுகள் மதிப்பெண்களைத் தாண்டி வாழ்க்கை
உங்களுடைய படிப்பு மட்டுமே உங்கள் வாழ்க்கையின் வெற்றி, தோல்வியின் அளவாக இருக்க முடியாது. நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்தாலும், அவை உங்கள் வெற்றிகளையும் தோல்வியையும் தீர்மானிக்கும். எனவே, மக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அழுத்தத்திலிருந்து குழந்தைகள் வெளியே வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.