பொமோடோரோ நுட்பம் என்றால் என்ன? ஜேஇஇ தேர்வர்கள் கவனத்திற்கு

JEE Main 2021 Exam preparations Tips:

மன அழுத்தத்தைத் தவிர்க்க, ஜேஇஇ தேர்வர்கள்  போமோடோரோ நேர மேலாண்மை நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இத்தாலியில் பல்கலைக்கழக மாணவர் பிரான்செஸ்கோ சிரிலோ இந்த நுட்பத்தை கண்டுபிடித்தார்.


இன்றைய உளவியல் துறையில் பொமோடோரோ நுட்பம்( Pomodoro) என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது, படிக்கும் நேரத்தை 25 நிமிட துண்டுகளாக்குங்கள் ( சிட்டிங் டைம்). ஒவ்வொரு துண்டுகளுக்கும் ஐந்து நிமிட இடைவெளி விடுங்கள். இந்த இடைவெளிக்குப் பெயர் தான் போமோடோரோஸ். சுமார் நான்கு போமோடோரோக்களுக்குப் பிறகு, 15 முதல் 20 நிமிடங்கள் கொண்ட இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள்.

நான்கு மணி நேரம் தொடர்ந்து படிப்பதற்கு பதிலாக, இந்த பொமோடோரோ நுட்பத்தின் மூலம் இரண்டு மணி நேரம் தான் படிப்பீர்கள் . நேரம் வீணாகுகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நாமே நமக்கு ஓய்வுக் கொடுத்து மீண்டும் அப்படிப்பைத் தொடங்குவதாலும், ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கு புதிதாய் திட்டமிட வாய்ப்புக் கிடைப்பதாலும் உணர்வு ரீதியாக நம் மனதில் அழுத்தங்கள் நீக்கப்படுகிறது.

கடைசி நேர தயாரிப்புக்கு உதவும் புத்தகங்கள் பட்டியல் :

Chemistry

NCERT/CBSE Textbooks (for Class 11th and 12th)
Modern Approach to Chemical Calculations by R.C. Mukherjee
Organic Chemistry by O.P. Tandon
Concept of Physical Chemistry by P. Bahadur
Concise Inorganic Chemistry by J.D. Lee
Physical Chemistry by P.W. Atkins
Organic Chemistry by Morrison and Boyd

Maths

Objective Mathematics by R D Sharma
Plane Trigonometry by S.L. Loney
The Elements Of Coordinate Geometry by S.L. Loney
Algebra by Dr S.K. Goyal
Play with Graphs by Amit M Aggarwal
Differential Calculus by Amit M Aggarwal
Integral Calculus by Amit M Aggarwal
Complete Mathematics for JEE Main TMH

11 மற்றும் 12ம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி புத்தகங்கள் தவிர்க்க முடியாதது.

பிப்ரவரி 23 முதல் 26 வரை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு நடைபெற உள்ளது. பிப்ரவரி ( 23 – 26 ) மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் (மார்ச் (15- 18) , ஏப்ரல் (27 to 30) & மே (24 to 28) தேர்வு நடைபெறும். மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு முறையும் தேர்வை எழுதலாம். மாணவர்களின் சிறந்த செயல் திறனின் அடிப்படையில் அவர்கள் தரவரிசையில் இடம் பெறுவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pomodoro technique helps to boost jee main 2021 preparations

Next Story
போராடும் விவசாயிகள் வன்முறை வெறியாளர்களா? சென்னை சிபிஎஸ்இ பள்ளி தேர்வு சர்ச்சை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com