புதுச்சேரி மாநில அ.தி.மு.க மற்றும் அம்மா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த, மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஜூலை 27) உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சியில் இல்லாத நிலையிலும், வேலையில்லாத படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் தனியார் நிறுவனங்களை அழைத்து அ.தி.மு.க மற்றும் அம்மா அறக்கட்டளை இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருவதாக புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்துகொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை அம்மா அறக்கட்டளை நிறுவனரும், மாநில மருத்துவர் அணி தலைவருமான டாக்டர் பிரபாகரன் ஏற்பாடு செய்திருந்தார்.