Advertisment

பாண்டிச்சேரி பல்கலை. முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பம் ஆரம்பம்; ஏப்.19 கடைசி தேதி

பாண்டிச்சேரி பல்கலைக்கழக முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க, கடைசி தேதி 19 ஏப்ரல் 2023

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pondicherry University

புதுவை பல்கலைக்கழகம்

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கவும் வரவேற்கப்படுகிறது என பாண்டிச்சேரி உதவி பதிவாளர் கே. மகேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) நடத்தும் பல்கலைக்கழகப் பொது நுழைவுத் தேர்வு சி.யு.இ.டி (பி.ஜி) – 2023-இன் அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்கும் பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர இணைய வழியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பத்தளம் 20.03.2023 முதல் திறக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4 Results Live: வெளியானது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 ரிசல்ட்; நேரடி லிங்க் இங்கே!

2023-24 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலைப் பட்டம் / பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் சி.யு.இ.டி (பி.ஜி) – 2023-க்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் சி.யு.இ.டி (பிஜி) – 2023-க்கு https://cuet.nta.nic.in/ என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

publive-image
பாண்டிச்சேரி பல்கலைக்கழக இணைப் பதிவாளர் மகேஷ்

விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் படிப்புகளின் தகுதித் தேவைகளை கவனமாகக் கருத்தில்கொள்ள வேண்டும். மேலும்  https://www.pondiuni.edu.in/admissions-2023-24/. என்னும் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வழங்கிய தேவையான தேர்வு தாள் குறியீடுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் https://cuet.nta.nic.in/ என்னும் என்.டி.ஏ.,வின் வலைத்தளத்தைத் தவறாமல் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க, கடைசி தேதி 19 ஏப்ரல் 2023 ஆகும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment