பாண்டிச்சேரி பல்கலை. தொலை தூர படிப்புகள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது; ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான கடைசித் தேதி இதுதான்

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது; ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான கடைசித் தேதி இதுதான்

author-image
WebDesk
New Update
Pondicherry University

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், ஆர்வமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தால் (DDE) மொத்தம் 20 (இருபது) பட்டப்படிப்புகள் வழங்கபட்டு வருகிறது, இதில் 8 MBA - மேலாண்மை பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றில் சந்தைப்படுத்தல் (Marketing), நிதி (Finance), மனித வள மேலாண்மை (Human Resource Management), சர்வதேச வணிகம் (International Business), பொது (General), சுற்றுலா (Tourism), செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி (Operations & Supply Chain Management). மேலாண்மை மற்றும் மருத்துவமனை மேலாண்மை (Hospital Management) ஆகியவை அடங்கும். 

4 முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளன அவற்றில் MA – ஆங்கிலம் (English), ஹிந்தி (Hindi), சமூகவியல் (Sociology) மற்றும் MCom (Finance) ஆகியவை உள்ளன. மேலும் 8 UG பட்டங்கள் (BBA, BCom, BA - ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் பத்திரிகை & வெகுஜன தொடர்பு) வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பட்டப்படிப்புகள் AICTE, புது தில்லி மற்றும் தொலைதூரக் கல்விப் பணியகம் (UGC-DEB), புது தில்லி ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்புகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது, மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான கடைசித் தேதி மார்ச் 31, 2024 ஆகும். ஆர்வமுள்ள மாணவர்கள் https://dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் விளக்கங்களுக்கு, எங்கள் உதவி மையத்தை 0413-2654439 என்ற எண்ணிலும் அல்லது மின்னஞ்சல் (ddehelpdesk@pondiuni.ac.in) மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தொலைதூர கல்வி இயக்குநர் டாக்டர் அர்விந்த் குப்தா தெரிவித்துள்ளார்.

Education Pondicherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: