Advertisment

தாவர, காகித கழிவுகளில் எத்தனால் தயாரிப்பு; புதுவை பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் குழு சாதனை

மாற்று எரிபொருள் முயற்சியில், தாவர, காகித கழிவுகள் மூலம் எத்தனால் தயாரித்த புதுவைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு; ஜெர்மன் காப்புரிமை பெற்று அசத்தல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pondicherry University

தாவர, காகித கழிவுகள் மூலம் எத்தனால் தயாரித்த புதுவைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தாவரக் கழிவுகள் மற்றும் காகிதக் கழிவுகளைக் கொண்டு எத்தனால் தயாரித்து அதில் வெற்றி கண்டுள்ளனர். இந்த பயோ எத்தனால் ரிபைனரி தொடர்பாக ஜெர்மன் நாட்டின் காப்புரிமையையும் பெற்றுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து புதுவைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்புப் பிரிவு உதவி பதிவாளர் (மக்கள் தொடர்பு) கி மகேஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, புதுவைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயோ-எத்தனால் ரிபைனரி மாதிரியை உருவாக்கியதற்கு இரண்டு ஜெர்மன் காப்புரிமை பெற்றுள்ளனர்.

இதையும் படியுங்கள்: கிளர்க் பணியிடங்களுக்கு தேர்வு எப்போது? புதுச்சேரி அரசு அறிவிப்பு

புதுவைப் பல்கலைக்கழகத்தின் ஃபங்கல் பயோடெக்னாலஜி (fungal biotechnology) ஆய்வகத்தின், பயோடெக்னாலஜி துறையின் ஆராய்ச்சியாளர்கள் குழு, வணிக அளவிலான மாற்று எரிபொருள் உற்பத்திக்கான உயிர்வேதியியல் பொறியியல் மற்றும் பூஞ்சை இன்-விட்ரோ பயோ-மாற்றம் (in-vitro bio-transformation) ஆகிய பகுதிகளில் இரண்டு ஜெர்மன் காப்புரிமைகளைப் (patent) பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங்கின் தலைமையின் கீழ், பேராசிரியர் வெங்கடேஸ்வர சர்மா, அவரது ஆய்வாளர்கள் குழு, மற்றும் ஒத்துழைப்பாளர்களான பேராசிரியர் சுதா ராணி (Department of Biochemistry and Molecular Biology, Pondicherry University) மற்றும் பேராசிரியர் ரெங்கநாதன் (Centre for Biotechnology, Anna University, Chennai) ஆகியோர் ஆய்வுக் குழுவிற்கு வழிகாட்டியுள்ளனர். இந்த குழுவில் டாக்டர். நவநீத் குமார் ராமமூர்த்தி, ரேவந்த் பாபு பள்ளம், . வினோத் வி, ஷோவன் ரக்ஷித், மற்றும் விக்னேஷ் ஆகியோர் பணியாற்றினர்.

புதுவைப் பல்கலைக்கழகத்தின் உயிரி எரிபொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு (biofuels group), பிரதமர் நரேந்திர மோடியின் எரிபொருட்களில் 20% எத்தனாலைக் கட்டாயமாகக் கலக்க வேண்டும் என்ற முன்மொழிவிற்கு ஏற்ப இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் எத்தனால் தயாரிக்க பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியுள்ள தாவரக் கழிவுகள் மற்றும் காகித கழிவுகளை சேகரித்துள்ளனர். ஒரு வட்ட பொருளாதார உயிரி சுத்திகரிப்பு மாதிரி (circular economical bio-refinery model) மற்றும் ஒரு கலப்பின உயிரி உலை (hybrid bio-reactor) தொடர்பான பாதுகாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளுக்கு கூடுதலாக, உயிரி எரிபொருள் ஆராய்ச்சி குழு உள்நாட்டு எத்தனால் உற்பத்தியை உருவாக்கி வருகிறது, இது நாட்டின் குறு சமூக விவசாயிகளுக்கான நிலையான முயற்சியாகும்.

தற்போது, புகழ்பெற்ற குறிப்பிடத்தக்க சில வெளியீடுகள் மற்றும் பிற காப்புரிமை நிலுவையில் உள்ள செயல்முறை- பொறியியல் வடிவமைப்புகளுடன், பயோ-ரிஃபைனரி யூனிட் ஆபரேஷன்களில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த பகுப்பாய்வு நுட்பங்களை எளிதாக்குவதற்கு குழு ஒரு எளிமையான மொபைல் பயன்பாட்டை (mobile app) உருவாக்குகிறது. அரசாங்கம் அல்லது நிதியளிப்பு முகவர் அல்லது தொழில் ஸ்பான்சர்களின் கூடுதல் நிதி உதவியுடன், நம் நாடு மாற்று எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய, “தொடர்ச்சியாக இயங்கக்கூடிய, சுய-நிலையான, 2G-எத்தனால் சுத்திகரிப்பு (bio-refinery) நிலையத்தை” உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள். புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங், ஆராய்ச்சிக் குழுவின் சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment