scorecardresearch

Post Office Jobs: தேர்வு இல்லாமல் 38,924 பேருக்கு பணி; பெண்கள் எந்த வேலையை தேர்வு செய்யலாம்?

அஞ்சல் அலுவலகங்களில் தேர்வு இல்லாமல் 38,924 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளில் பெண்கள் எந்த வேலையை தேர்வு செய்யலாம் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு இங்கே பதில் தெரிந்துகொள்ளலாம்.

post office, post office recruitment, post office vacancy 2022, Post Office GDS Job, Post Office GDS Job Common Doubts Explanation, அஞ்சல் அலுவலகங்களில் தேர்வு இல்லாமல் 38,924 பேருக்கு வேலை வாய்ப்பு, உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள், போஸ்ட்மேன் வேலை, போஸ்ட் மாஸ்டர் வேலை

அஞ்சல் அலுவலகங்களில் தேர்வு இல்லாமல் 38,924 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பணிகளில் பெண்கள் எந்த வேலையை தேர்வு செய்யலாம் உள்ளிட்ட சந்தேகங்களுக்கு இங்கே பதில் தெரிந்துகொள்ளலாம்.

அஞ்சல் துறையில் ஜிடிஎஸ் ரெக்ருய்ட்மெண்ட்டில் நிறைய சந்தேகங்கள் எழுவதாக கூறுகின்றனர். இதில், முக்கியமான 5 சந்தேகங்களுக்கு பதில்களைப் பார்க்கலாம்.

முதலில், கணினி சான்றிதழ் விண்ணப்பிப்பது, ஓ.பி.சி பிரிவில் எப்படி விண்ணப்பம் செய்வது, இடஒதுக்கீடு அடிப்படையில் எப்படி விண்ணப்பிப்பது, டிவிஷனில் ஒரு டிவிஷன் மட்டுமே தேர்வு செய்ய முடியுமா? அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட டிவிஷன் தேர்வு செய்ய முடியுமா? அதோடு கட் ஆஃப் மதிப்பெண்ணில் நிறைய பேர் சந்தேகங்களை எழுப்புகின்றனர். மேலும், பெண்களுக்கு எந்த வேலையை தேர்வு செய்யலாம் என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் உள்ளன. இந்த சந்தேகங்களுக்கு ராஜ் இன்ஃபோ யூடியூப் சேனலில் பதில் அளித்து சந்தேகங்களைத் தெளிவு படுத்தியுள்ளனர்.

  1. முதலில் கம்ப்யூட்டர் கோர்ஸ் ஏதாவது முடித்து இருந்தால், அந்த கணினி சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கு பயன்படுமா? பயன்படும் என்றால் எப்படி விண்ணப்பிப்பது என்று பலரும் கேட்டுள்ளனர்.

11, 12 வகுப்பில் கம்ப்யூட்டர் குரூப் எடுத்திருந்தால் 12 ஆம் வகுப்பு சான்றிதழையும் கூட அப்லோட் செய்யலாம். அல்லது கல்லூரியில் கம்ப்யூட்டர் தொடர்பாக படித்திருந்தால் அந்த செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழை அப்லோட் செய்யலாம். அல்லது வெளியே எங்கேயாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து முடித்து அந்த சான்றிதழ் வைத்திருந்தாலும் விண்ணப்பத்தில் அப்லோட் பண்ணலாம்.

  1. இரண்டாவது பலரும் சாதி சான்றிதழ் பிரிவில், எதில் விண்ணப்பிக்கலாம் என்று பலரும் சந்தேகம் கேட்டுள்ளனர்.

விண்ணப்பிப்பவர் ஓ.பி.சி அல்லது எம்.பி.சி பிரிவில் வருகிறார் என்றால் ஓ.பி.சி பிரிவில் விண்ணப்பிக்கலாம். யூ.ஆர் (Ur-Unreserved பிரிவிலும் விண்ணப்பிக்கலாம். ஆனால், விண்ணப்பிக்கும்போது முதல் பக்கத்தில் எந்த சாதி (community) என்ற பிரிவில் நீங்கள் ஓ.பி.சி.யாக இருந்தால் ஓ.பி.சி என்று விண்ணப்பிக்க வேண்டும்.

அதே போல, பட்டியல் இனத்தவர் (எஸ்சி) என்றால் எஸ்சி என்று விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் யூஆர் என்றும் விண்ணப்பிக்கலாம். அதே போல, இ.டபில்யூ.எஸ் EWS பிரிவினரும் EWS அல்லது (Ur) விண்ணப்பிக்கலாம்.

  1. இதையடுத்து டிவிஷன் தேர்வு செய்வது பற்றி நிறைய சந்தேகங்கள் எழுவதாக கூறுகின்றனர்.

இதற்கு முன்னர், 2021 ஆம் ஆண்டில் Cycle 3 பணிகளுக்கு எடுக்கும்போது ஒரு விண்ணப்பதாரர் எத்தனை டிவிஷன்களை வேண்டுமானாலும் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். ஒருவர் கன்னியாகுமரியில் இருக்கிறார் என்றால் அவர் சென்னைக்கோ, செங்கல்பட்டுக்கோ அல்லது எல்லா டிவிஷனுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இந்த முறை ஒருவர் ஒரே ஒரு டிவிஷனை மட்டும்தான் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும். உதாரணத்திற்கு ஒருவர் கன்னியாகுமரி டிவிஷனுக்கு விண்ணப்பிக்கிறார் என்றால், அந்த ஒரு டிவிஷனுக்கு மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும். அதனால், நீங்கள் எந்த டிவிஷனில் வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இது எதனால், என்றால் கடந்த முறை காலி பணியிடங்கள் வெளியாவதில் காலதாமதாம் ஆனது. ஏனென்றால், நிறைய பேர் தூரம் அதிகமாக இருப்பதால், வேலைக்கு வராமல் இருந்ததாக கூறப்பட்டது. அதனால், ஒருவர் ஒரு டிவிஷனுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று வைத்துள்ளார்கள்.

  1. கட் ஆஃப் மதிப்பெண் பொறுத்தவரைக்கும், 480 மதிப்பெண் வரைக்கும் ஓ.பி.சி பிரிவினருக்கு பார்பார்கள். எஸ்சி பிரிவில் 475-480 மதிப்பெண் வரைக்கும் இருந்தால்தான் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களுக்கு வேலை கிடைக்காதா என்றால், இந்த வேலை 10ம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு பணியாளரைத் தேர்வு செய்கிற வேலை. தேர்வு இல்லாமல் பணியாளரைத் தேர்வு செய்யும் வேலை என்பதால், இது முழுக்க முழுக்க மதிப்பெண் அடிப்படையில், எடுக்கப்படுவதால் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கே இந்த வேலை கிடைக்கும்.

அதே நேரத்தில், உங்களுக்கு முன்னாள் விண்ணப்பித்த அதிக மதிப்பெண் எடுத்துள்ள விண்ணப்பதாரர் வரவில்லை என்றால் அடுத்து உள்ளவர்களுக்கு கிடைக்கும். அந்த அடிப்படையில் வேன்டுமானல், மதிப்பெண் குறைவாக எடுத்தவர்களுக்கு வேலை கிடைக்கலாம். அதனால், விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. அடுத்து பெண்களுக்கு ஏ.பி.பி.எம் (Assistant Branch Post Master) வேலை பொருத்தமாக இருக்குமா? என்றால், ABPM வேலை என்பது போஸ்ட் மாஸ்டர் வேலைதான். இதில் தபால்களை கொண்டு செல்கிற பணிதான். பெரும்பாலும் கிராமங்களில்தான் பணி இருக்கும். முழுக்க முழுக்க வாகனத்தில் பயணம் செய்து தபால்களை கொடுப்பதாக இருக்கும். அதனால், இந்த வேலை பெண்களுக்கு பொருத்தமாக இருக்குமா என்று முடிவு செய்து பெண்கள் விண்ணப்பிக்கலாம். போஸ்ட் உமன் வேலையும் தன்னால் செய்ய முடியும் என்று உறுதியாக உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Post office gds job common doubts explanation women will choose which job