Advertisment

தபால் அலுவலக வேலைவாய்ப்பு; 10, 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!

Post Office recruitment 2021 postal assistant, multitasking staff vacancies: தபால் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 18

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
post office schemes

இந்திய தபால் ஆணையமானது, தபால் உதவியாளர் (Postal Assistant / Sorting Assistant) மற்றும் உதவியாளர் (Multitasking Staff) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 57 காலியிடங்கள் நிரப்பட உள்ளது.

Advertisment

இந்தியா முழுவதும் தபால் அலுவலக காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தபால் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  https://www.indiapost.gov.in/ என்ற இந்திய தபாலின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

Postal Assistant தபால் உதவியாளர் பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 45

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 – 27 வயதுக்குள்

முக்கிய தேதிகள்: 10-07-2021 முதல் 18-08-2021

சம்பளம்: ரூ.18,000-81,000

Multitasking Staff உதவியாளர் பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 09

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 - 25 வயதுக்குள்

முக்கிய தேதிகள்: 10-07-2021 முதல் 18-08-2021

சம்பளம்: ரூ. 18,000- 56,900

Sorting Assistant வகைப்படுத்தல் உதவியாளர் பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள்: 03

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயதுத் தகுதி : 18 – 27 வயதுக்குள்

முக்கிய தேதிகள்: 10-07-2021 முதல் 18-08-2021

சம்பளம்: ரூ. 25,500 முதல் 81,100

இந்த பணியிடங்கள் பெரும்பாலும் விளையாட்டு வீரர்களைக் கொண்டு நிரப்படவுள்ளது. தகுதியானவர்கள் கடைசித் தேதிக்கு முன் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களைத் தொடர்ந்து பெற இந்த தளத்தை தொடர்ந்து பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Post Office Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment