Advertisment

தபால் துறை வேலை வாய்ப்பு; 1899 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்திய தபால் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 1899 காலியிடங்கள்; 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
post office jobs

இந்திய தபால் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய தபால் துறையில் அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய தபால் துறையில் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவியாளர், தபால்காரர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1899 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.12.2023

Postal Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 598

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 25,500 – 81,100

Sorting Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 143

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 25,500 – 81,100

Postman

காலியிடங்களின் எண்ணிக்கை – 585

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 21,700 – 69,100

Mail Guard

காலியிடங்களின் எண்ணிக்கை – 3

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 21,700 – 69,100

Multi Tasking Staff

காலியிடங்களின் எண்ணிக்கை – 570

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 18,000 – 56,900

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விளையாட்டு துறையில் படைத்த சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dopsportsrecruitment.cept.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://dopsportsrecruitment.cept.gov.in/Notifications/English.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Jobs Post Office
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment