Advertisment

யு.ஜி.சி நெட் வினாத்தாள் டெலிகிராமில் கசிந்தது - ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு தொடர்ந்து எதிர்கட்சிகளால் தாக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக நீட் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களை காங்கிரஸ அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
pradhan

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

யு.ஜி.சி நெட் தேர்வு ரத்து மற்றும் நீட் விவகாரத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை, நீட் யு.ஜி 2024 இன் தாள் கசிவு தொடர்பாக பீகார் காவல்துறையுடன் கல்வி அமைச்சகம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருவதாகக் கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: NEET UG, UGC NET 2024 Row: Pradhan admits ‘UGC NET’ question paper circulated on Telegram, orders high-level panel

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சில பிராந்தியங்களில் தவறுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், பாதுகாப்பு மீறலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்தார்.

தேசிய தேர்வு முகமையின் (என்.டி.ஏ) செயல்பாடு மற்றும் இந்த விஷயத்தை ஆராயும் உயர்மட்டக் குழுவை அமைப்பதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

ஜூன் 18-ம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 19-ம் தேதி ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் ஜூன் 2024 தேர்வைப் பற்றி பேசிய அமைச்சர், வினாத்தாள் கசிந்தது விசாரணையில் தெரியவந்ததை ஒப்புக்கொண்டார். மேலும், வெளியான யு.ஜி.சி வினாத்தாள் சமூக ஊடக தளமான டெலிகிராமில் பகிரப்பட்ட அசல் வினாத்தாளுடன் பொருந்தியது என்றும் கூறினார். 

இதற்கிடையில், ஜூன் 18-ம் தேதி நடத்தப்பட்ட யு.ஜி.சி நெட் தேர்வின் ஒருங்கிணைப்பை சமரசம் செய்ததற்காக அடையாளம் தெரியாத நபர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) வழக்கு பதிவு செய்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வியாழக்கிழமை பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில், வினாத்தாள் கசிவுக்கு முக்கிய காரணம் கல்வி நிறுவனங்கள் பா.ஜ.க மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் செலுத்தி வருவதே என்றும், அது தலைகீழாக மாறாத வரை வினாத்தாள் கசிவுகள் நிற்காது என்றும் கூறினார்.  “அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் பின்பற்றும் துணைவேந்தர்களை நியமித்துள்ளனர், எனவே, அத்தகைய சாதாரணமானவர்கள் நம்முடைய நிறுவனங்களை நடத்துகிறார்கள்” என்று அவர் கூறினார்.

தேர்வின் நேர்மை சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து யு.ஜி.சி நெட் தேர்வை ரத்து செய்வதாக புதன்கிழமை இரவு கல்வி அமைச்சகம் அறிவித்தது. மே 5-ம் தேதி நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் யு.ஜி தேர்வுக்கு எதிராக முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சலசலப்புக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்தது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு தொடர்ந்து எதிர்கட்சிகளால் தாக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக நீட் தேர்வை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களை காங்கிரஸ அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என பல்வேறு மாணவர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. புதுடெல்லியில் கல்வி அமைச்சு மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இல்லத்திற்கு வெளியே வியாழக்கிழமை போராட்டம் நடத்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

யு.ஜிசி நெட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ugc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment