சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் ப.சிதம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Pradhan, Chidambaram clash over Madras University VC appointment delay
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நாட்டின் பழமையான மாநிலப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகம், துணைவேந்தர் இன்றி ஐந்து மாதங்களாக இயங்கி வருகிறது.
ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை தனது எக்ஸ் தளத்தில், கடந்த ஐந்து மாதங்களாக மெட்ராஸ் பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லாமல் உள்ளது என்றும், மாநில ஆளுநர் ஏன் "மாநிலத்தில் பல சர்ச்சைகளின் மையத்தில்" இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.
“1857 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்றான, மெட்ராஸ் பல்கலைக்கழகம் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது. கவர்னர்-அரசு இடையே ஏற்பட்ட முறுகல் நிலைதான் காரணம்... தமிழக ஆளுநர் ஏன் மாநிலத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக இருக்கிறார்? கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர். இது நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான வர்ணனையாகும்,” என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
Appointment of Vice Chancellors cannot be made in contravention with applicable UGC regulations. The Tamil Nadu Govt./ Registrar of the University has to constitute a search-cum-selection-committee including a nominee of UGC, Chairman, in line with the judgement of constitutional… https://t.co/ngxjYIPDsS
— Dharmendra Pradhan (@dpradhanbjp) January 27, 2024
இந்த குற்றச்சாட்டுக்கு ஆன்லைனில் பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக அரசும், பல்கலைக்கழக பதிவாளரும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) பரிந்துரையை ஏற்கவில்லை என்று எழுதினார். தேசிய அரசியலமைப்பு நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, யு.ஜி.சி பரிந்துரைத்தவரின் தலைமையில் ஒரு தேடல் மற்றும் தேர்வுக் குழு, தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகப் பதிவாளரால் அமைக்கப்பட வேண்டும்,” என்றும் தர்மேந்திர பிரதான் பதிவிட்டுள்ளார்.
யு.ஜி.சி விதிமுறைகளை மீறி துணைவேந்தர்களை நியமிக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
"மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமனம் தாமதம் தொடர்பாக, UGC தலைவர் நியமனம் கோரி தமிழ்நாடு அரசு / பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட தகுதியான அதிகாரியிடம் இருந்து UGC இன்னும் கோரிக்கையை பெறவில்லை." என்று தர்மேந்திர பிரதான் பதிவிட்டுள்ளார்.
தற்போது, துணைவேந்தர் நியமனங்கள் ஆளுநரால் செய்யப்படுகின்றன, ஆளுநர் பொதுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் பணியாற்றுகிறார். சென்னைப் பல்கலைக்கழகம், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தர்களை நியமிக்க மூன்று தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களை அமைத்து ஆளுநர் செப்டம்பர் 6 ஆம் தேதி அறிவித்தார். அப்போதே இப்போதைய பிரச்சினை ஆரம்பமானது. கூடுதலாக, பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தலைவர் சார்பாக ஒரு உறுப்பினர் நியமிப்பதன் மூலம் அவர் குழுவின் நான்காவது உறுப்பினரை முன்மொழிந்தார்.
“கூடுதல் தகவலுக்கு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் தேர்வு மற்றும் நியமனம் செய்ய ஒரு UGC தலைவர் நியமனம் தமிழக ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, கோரிக்கை விடுக்கப்பட்டது,” என்று கூறிய தர்மேந்திர பிரதான், யு.ஜி.சி தலைவர் நியமனத்திற்கான கோரிக்கையை அனுப்பாத தமிழக அரசிடம் ப.சிதம்பரம் கேள்வி எழுப்ப வேண்டும், என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.