சர்வதேச கணித ஒலிம்பியாட் : இளம் வயதில் தங்கத்தை தட்டிய பிரஞ்சல் ஸ்ரீவஸ்தவா
இந்த சிறு வயதில் பல நாடுகளுக்கு பயணம் செய்து பதக்கங்களை வெல்லும் இவர், ஒவ்வொரு வெற்றிகளிலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை அனுபவங்களைப் பெருகிறார்.
பெங்களூரை சேர்ந்த பிரஞ்சல் ஸ்ரீவஸ்தவா (15 வயது ) சர்வதேச கணித ஒலிம்பியாட் (ஐஎம்ஓ) பதக்கத்தை ஏழு ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவிற்க்கு கொண்டு வந்துள்ளார். உலகவளில் கடினமானதாக கருதப்படும் இந்த போட்டியில், மிகவும் இளைய வயதில் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கணித பாடத்தை ஒரு வகையான வேடிக்கையான செயல்பாடு என்று கருதும் ஸ்ரீவஸ்தவா , தனது 3- ம் வகுப்பு முதல் இருந்தே கணித போட்டிகளில் பங்கேற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக, கடந்த ஆண்டு ஐ.எம்.ஓ வில் கலந்து கொண்ட ஸ்ரீவஸ்தவா வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த வருடம் தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். கணித நுட்பங்களை மனப்பாடம் செய்வதோடு மட்டுமல்லாமல், கணிதத்தை புரிந்துக் கொள்வதில் இருந்த மனு உறுதிபாடே இந்த முறை ஸ்ரீவஸ்தவாவிற்கு தங்கபதக்கம் வாங்க உதவியுள்ளது . மக்களிடம் கணிதத்தை பற்றிய அணுகுமுறையில் கொண்டுவந்தால் கணித பாடத்தை உணர்வுப் பூர்வமாக புரிந்துக் கொள்ள முடியும் என்பது இந்த குழந்தை கணிதவியலாளரின் நம்பிக்கை.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுடன் உரையாடிய போது, ” கணித பாடத்தில் ஆர்வம் கொடுக்கக் கூடிய நன்கு வழிகாட்டிகள் கிடைத்ததது எனது அதிர்ஷ்டம். பாட புத்தகங்களில் இருந்து மட்டும் கணிதத்தை யோசிக்காமல, கணிதத்தை பொழுதுபோக்காக சொல்லும் புத்தகங்களில் நான் அதிகம் விரும்பி படிப்பேன் ” என்று கூறியுள்ளார்.
மேலும், “நான் நடைமுறை பற்றிய கணித கேள்விகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன் . எனக்கு மிகவும் பலவீனமாய் கருதும் வடிவியல் (ஜியோமெண்டரி ) பாடத்தில் அதிக நேரம் செலவிடுவேன் ” என்று தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.
தங்கம் வாங்குவதற்கு தனிப்பட்ட யுக்தி என்று எதையும் கையாளவில்லை, கணிதத்தை கணிதமாகவே பார்த்துள்ளார் என்பது அவரின் உரையாடலில் இருந்து நமக்கு தெரியவருகிறது.
சிபிஎஸ்இ வாரியமும் இந்த மாத தொடக்கத்தில் பிரஞ்சல் ஸ்ரீவஸ்தவாவின் சாதனையை ட்வீட் செய்தது.
#cbsefortalent Pranjal,a student of National Public School-Koramangala, brought laurels to nation by winning gold medal at International Maths Olympiad-2019 in United Kingdom.IMO is perceived as the biggest and toughest of competitions across the world.@HRDMinistry @DrRPNishank pic.twitter.com/sPeaDwY9Ds
— CBSE HQ (@cbseindia29) October 13, 2019
பல போட்டிகளில் பங்கேற்பதால் , பிற கணித ஆர்வலர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் ஸ்ரீவஸ்தவாவிற்கு கிடைகின்றது . அவரது வழிகாட்டிகளில் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்ஐடி) பிஎச்டி மாணவர் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரஞ்சல் ஸ்ரீவஸ்தவா வின் பெற்றோர்கள் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி)வல்லுநர்கள், மூத்த சகோதரர் கணிதக் கோட்பாடு ஆராய்ச்சியாளர். இந்த குடும்ப பிண்ணனியில் இருந்து வரும் ஸ்ரீவஸ்தவா, கணிதம் அல்லது கணினிக் கோட்பாடு அறிவியலைத் தொடர ஆர்வமாக உள்ளார். உயர்கல்விக்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி) அல்லது அமெரிக்காவின் எம்.ஐ.டி இவரின் விருப்பமாக உள்ளது.
இந்த சிறு வயதில் பல நாடுகளுக்கு பயணம் செய்து பதக்கங்களை வெல்லும் இவர், ஒவ்வொரு வெற்றிகளிலும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை அனுபவங்களைப் பெருபவராகிறார்.
அவரது தந்தை ஆஷிஷ்குமார் ஸ்ரீவாஸ்தவா கருத்து தெரிவிக்கையில், “நான் வெளிநாடுகளுக்குச் பயணம் செய்யும் போது, பிரஞ்சலுக்கு கணிதத்தை ஒரு வேடிக்கையான வழியில் கற்க உதவும் சுவாரஸ்யமான புத்தகங்களை வாங்கி வருவேன் . இது மிகச் சிறிய வயதிலேயே அவரது ஆர்வத்தை வளர்த்தது.
கணிதமாக இருந்தாலும் சரி, இசையாக இருந்தாலும் சரி, நாங்கள் ஒருபோதும் எங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை, அவர்களின் தனிப்பட்ட நலன்களை வளர்க்க நாங்கள் சிறிய உதவியாய் இருந்தோம்.” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் “வேடிக்கை நிறைந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள அனுப்புவது போலவே நாங்கள் ஸ்ரீவஸ்தவாவை ஒலிம்பியாட்ஸுக்கு அனுப்புவோம்,” என்று கூறினார்.
கணிதத்தைத் தவிர, பிரஞ்சல் ஸ்ரீவஸ்தவா இசையை நேசிக்கிறார். பியானோ மற்றும் டிரம்ஸ் அவர் இசைக்கும் கருவிகள் ஆகும் .
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook