முக்கியத்துவம் பெறும் ஆங்கில வழிக்கல்வி: பிராந்திய மொழிகளின் நிலை என்ன?

Household Social Consumption on Education in India :

By: Updated: July 20, 2020, 06:08:02 PM

Harikishan Sharma

உயர்நிலைப் படிப்புகள் வரை, பயிற்றுவிக்கும் மொழியாக  ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கும் போக்கு அதிகரித்து காணப்படுவதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ், மலையாளம், கன்னடம், பஞ்சாபி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றைப் பேசும் முன்-ஆரம்ப பள்ளி மாணவர்களில் (அதாவது, நர்சரி, கே.ஜி) 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கப்பட்டனர்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இருப்பினும், ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் அரம்பக் கல்வி மாணவர்களில், இந்தி மொழி  பேசுவோரின் எண்ணிக்கை 2018 ல் 18.2 சதவீதமாக குறைந்துள்ளது. 2014 இல் இந்த எண்ணிக்கை 18.3 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை 1.13 லட்சம் வீடுகளில் உள்ள 1.52 லட்சம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட  இந்த ஆய்வு  ‘Household Social Consumption on Education in India’ என்ற பெயரில்     கடந்த வாரம் வெளியானது.

 

 

தேசிய அளவில், 48 சதவீத மாணவர்கள் தங்கள் சொந்த தாய் மொழியில் முன்-ஆரம்ப பள்ளிகளில் (நர்சரி, கே.ஜி)  பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பக் கல்வி மட்டத்தில் (1 வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை), 23.2 சதவீத மாணவர்களுக்கு ஆங்கிலம் வழிக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி-ஜூன் 2014 வெளிவந்த கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 22.3 சதவீதமாக இருந்தது.

இந்தியாவில், 65 சதவீத மாணவர்கள் தங்கள் தாய்மொழி மூலம் கல்வியைப் பயின்று வருகின்றனர்.

இந்தி மொழி பேசும் வீடுகளில் ஆங்கில வழி கல்விக்கு ஏன் விருப்பம் குறைகிறது என்பதற்கான விளக்கம் கணக்கெடுப்பில் நேரடியாக கூறப்படவில்லை என்றாலும்,  பொருளாதாரம் முக்கிய காரணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆங்கில வழிக்கல்விகளில் தனியார் துறைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  தேசிய சராசரியான 8331 ரூபாயை விட, இந்தி பேசும் மாநிலங்களில், தனிநபர் கல்வி நுகர்வுக்கான வருடாந்திர செலவு குறைவாக உள்ளது. சத்தீஸ்கர் (ரூ. 3,575), பீகார் (ரூ .4,379) , ஜார்க்கண்ட் (ரூ .4,840), மத்தியப் பிரதேசம் (ரூ .5,769), உத்தரபிரதேசம் (ரூ .6,301), ராஜஸ்தான் (ரூ .7,835) .

நடுநிலைப்பள்ளியில் (வகுப்பு VI-VIII), ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களின் விகிதம் 19.3( 2014 ல்) சதவீதத்திலிருந்து 2017-18 காலகட்டத்தில் 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல், உயர்நிலைப் பள்ளியில் (IX-X வகுப்பு)  ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 19.3 சதவீதத்திலிருந்து 20.9 சதவீதமாக உயர்ந்துள்ளன.

இருப்பினும், இந்த காலகட்டத்தில் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் வழிக்கல்வி பயிலும் மாணவர்களின் (XI- XII) எண்ணிக்கை, எந்த வேறுபாடின்றி  29 சதவீதமாக உள்ளது.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Preference for english as a medium of instruction in school is a rising trend

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X