Advertisment

நீட் 2022 தேர்வு எழுத போறீங்களா… தயாரவதற்கான திட்டம் இதுதான்!

உங்களிடம் ஒரு திட்டமிடல் இருந்தால் மட்டுமே, நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். குறிப்பாக, படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு நீட் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி முழுமையாக அறிவது அவசியமாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் 2022 தேர்வு எழுத போறீங்களா… தயாரவதற்கான திட்டம் இதுதான்!

மருத்துவ நுழைவு தேர்வான நீட்டை ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) நடத்தி வருகிறது. நீட் 2022க்கான அட்டவணையை டிசம்பர் இறுதி அல்லது 2022 ஜனவரியின் முதல் வாரத்தில் என்டிஏ வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

இதுதொடர்பான அனைத்து தகவல்களையும் என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளமாந neet.nta.nic.in இல் காணலாம். பொதுவாக, ஆண்டுதோறும் நீட் தேர்வு மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும். ஆனால், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக செப்டம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இம்முறை கொரோனா கட்டுக்குள் இருப்பதால், பழைய முறைப்படி மே மாதத்தில் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதற்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி/பிப்ரவரி 2022 இல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, டாப் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதற்கு, உங்களிடம் ஒரு திட்டமிடல் இருந்தால் மட்டுமே, நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். குறிப்பாக, படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு நீட் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை பற்றி முழுமையாக அறிவது அவசியமாகும்.

2021-22 வரை, CBSE பாடத்திட்டத்தில் நீட் பாடத்திட்டம் 98% கவர் ஆகியிருக்கும். ஆனால், இம்முறை அப்படி கிடையாது. இந்தாண்டின் தொடக்கத்தில், வாரியம் பாடத்திட்டத்தை திருத்தி, 30 விழுக்காடை அந்த பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. எனவே, இனிமேல் 12ஆம் வகுப்பு பாடம் படித்தது போதும் என சிபிஎஸ்இ விண்ணப்பதாரர்களால் நீட் தேர்வை எழுதிட முடியாது.

NEET 2022 தேர்வுக்கான விரிவான தயாரிப்பு திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இம்முறையை பின்பற்றி நல்ல மதிப்பெண்களை பெறலாம்.

முக்கியமான சேப்டர்களை முதலில் கவர் செய்ய வேண்டும்

இதை பின்பற்ற, மாணவர்கள் நீட் தேர்வு முறை மற்றும் சேப்டர் வாரியான மார்க் வெயிட்டேஜை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து அனைத்து சேப்டர்களையும் உள்ளடக்கிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும். மேலும், அதனை ரிவைஸ் செய்திடும் நேரத்தையும் கணக்கிட்டு வைத்துகொள்ள வேண்டும். தேர்வில் அதிகபட்ச வெயிட்டேஜ் கொண்ட சேப்டர்களை முதலில் முடிப்பது நல்லது. இறுதியாக, குறைந்த மார்க் கொண்ட சேப்டர்களை கவர் செய்யலாம். குறைந்த மதிப்பெண் கொண்ட சேப்டர்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் முக்கிய சேப்டர்கள் கேள்விகளுடன் ஒப்பீட்டளவில் எளிதானதாக தான் இருக்கும்.

டைம் மேனேஜ்மென்ட், கேள்விக்கு பதில் கண்டறியும் முறை

போட்டி தேர்வுகளில் முக்கியமான ஒன்று டைம் மேனேஜ்மென்ட் தான். மாணவர் நேரத்தை திறம்பட நிர்வகிக்கக் கற்றுக் கொள்ளும்போது தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கிறது.

இது தவிர, நீட் ஆர்வலர்கள் அனைத்து கேள்விகளுக்கும் விரைவாக பதிலளிக்கும் வகையில் தயார் செய்ய வேண்டும். அவ்வப்போது ரிவைஸ் செய்து அதனை மேம்படுத்த வேண்டும். ஏனென்றால், வழக்கமான முறையில் பொறுமையாக பதிலை கண்டறிவது போட்டி தேர்வுகளுக்கு கடினமான காரியம் ஆகும். மாணவர்கள் வேகமாக செயல்பட்டு பதிலை கண்டறிய வேண்டும்.

பாடங்களை ரிவைஸ் செய்திட அதிக நேரம் ஒதுக்குங்கள்

தேர்வு நாள் நெருங்கும் சமயத்தில், ரிவைஸ் செய்திட அதிக நேரத்தை செலவிட வேண்டும். அனைத்து சேப்டர்களையும் கவர் செய்து, அதனை மீண்டும் ரிவைஸ் செய்வது கட்டாயமாகும். முடிந்தவரை பல மாதிரி தேர்வுகளை நடத்தி பதிலளிக்க வேண்டும். இது உங்களின் தவறுகள் மற்றும் குறைபாடுகளை கண்டறிய உதவியாக இருக்கும்.

நீங்களே சோதித்து பார்க்க வேண்டும்.

மாதிரி தேர்வுகளை தவிர, முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கு பதிலளிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மேலும் நேர நிர்வாகத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம், தேர்வில் எந்த சேப்டரில் பதிலளிக்க முடியவில்லையோ, அதில் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் 180 நிமிடங்களில் 180 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே உள்ளது. 1 நிமிடத்திற்குள், மாணவர்கள் கேள்விகளைப் படித்து பதிலை கண்டறிய வேண்டும்.

அதே போல், ஆண்டுதோறும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போட்டி நிறைந்த நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற ஸ்டடி மெடிரியல் சேகரிக்க வேண்டும். அதே போல், . சிறந்த பயிற்சி நிறுவனங்கள் வழங்கும் புத்தகங்களும், தொகுப்புகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment