பிரதமரின் கல்வி உதவித்தொகை: 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - அதிகாரிகள் அறிவிப்பு

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
pm scholarship modi

2025-2026-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு தகுதியானவர்கள் ஆவர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி), பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மூலம் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

விண்ணப்பிக்கத் தகுதிகள்:

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

2025-2026-ம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு தகுதியானவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்கும் முறை:

புதிய மாணவர்கள்: தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் https://scholarships.gov.in தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் விவரங்களைப் பதிவு செய்தால், ஓ.டி.ஆர். எண்ணும், கடவுச்சொல்லும் குறுஞ்செய்தியாக வரும். இந்த விவரங்களைக் கொண்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

Advertisment
Advertisements

பழைய மாணவர்கள்: கடந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த மாணவர்கள், அதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை புதுப்பித்தல் ('Renewal Application') என்ற இணைப்பில் தங்கள் ஓ.டி.ஆர். எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்பத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 30, 2025

கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க கடைசி நாள்: அக்டோபர் 15, 2025 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரைத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை ஆன்லைன் மூலமும் அறிந்துகொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Scholarship

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: