scorecardresearch

சென்னையில் வேலை வாய்ப்பு முகாம்: இந்த தேதியில் மிஸ் பண்ணாதீங்க!

சென்னையில் இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

Tamil News
Tamil News Updates

சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு செய்துள்ளது.

மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் நடத்தி வருகிறது.

மேலும் தற்போது சென்னையில் இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

இங்கு பங்குகொள்வதற்கு 8, 10, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதி கொண்ட அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் இருபதிற்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in எனும் இணையத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Private job fair in guindy chennai on 21st april 2023