Advertisment

எம்.பி.பி.எஸ் படிப்பு; தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிக்க எவ்வளவு செலவாகும்?

மருத்துவ படிப்பு; இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ் படிக்க எவ்வளவு செலாவாகும்?

author-image
WebDesk
New Update
MBBS

இந்தியாவில் மருத்துவ படிப்பு என்பது மிகவும் விரும்பப்படும் படிப்பாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள வரையறுக்கப்பட்ட இடங்களுக்குப் போட்டியிடுகின்றனர். 

Advertisment

2023-24 ஆம் ஆண்டில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இளநிலை நீட் (NEET-UG) தேர்வுக்கு விண்ணப்பித்தனர், அதேபோல் 1.7 லட்சத்திற்கும் அதிகமான மருத்துவ ஆர்வலர்கள் முதுநிலை நீட் (NEET-PG) தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர், இது நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு இருக்கும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

கடுமையான போட்டி மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், மருத்துவத் கல்விக்கு இருக்கும் பல மாணவர்களை, அரசுக் கல்லூரிகளில் இடங்கள் இல்லை என்றாலும் தனியார் மருத்துவ நிறுவனங்களைத் தேர்வுசெய்யத் தூண்டுகிறது. ஆனால் இந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடைகளில் ஒன்று இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்விக்கான அதிக செலவு ஆகும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம், அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆண்டுக்கு சில ஆயிரம் ரூபாய் வசூலிக்கும்போது, தனியார் நிறுவனங்கள் இளங்கலை (எம்.பி.பி.எஸ்) படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வசூலிக்கலாம். முதுகலை (MD, MS) மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டணம் இன்னும் அதிகமாக இருக்கலாம், சில நிறுவனங்கள் படிப்பின் முழு காலத்திற்கும் ரூ. 1 கோடி வரை வசூலிக்கின்றன. இந்த திகைப்பூட்டும் கட்டணங்கள், கணிசமான கடன்கள் வாங்காமலோ அல்லது உதவித்தொகையை நம்பாமலோ மருத்துவக் கல்வியைப் பெறுவதற்கு ஆர்வமுள்ள பல மருத்துவர்களுக்கு கடினமாக உள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான செலவு நிறுவனம் மற்றும் பிராந்தியத்தைப் பொறுத்து கணிசமாக மாறுபடும். இந்தியா முழுவதும் உள்ள பல பிரபலமான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணங்களின் விபரங்களை TOI செய்தியாக வெளியிட்டுள்ளது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.50,000 முதல் 1,00,000 வரை செலவாகும். முதுநிலை படிப்புக்கு ரூ.1.25 முதல் 2 லட்சம் வரை செலவாகும்.

சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.22 லட்சம் முதல் 24 லட்சம் வரை செலவாகும். முதுநிலை படிப்புக்கு ரூ.25 முதல் 28 லட்சம் வரை செலவாகும்.

கொச்சியில் உள்ள அமிர்த மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.18 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகும். முதுநிலை படிப்புக்கு ரூ.20 முதல் 22 லட்சம் வரை செலவாகும்.

இந்தக் கட்டணம் விபரத்தில் சில மாறுபாடுகள் இருக்கலாம். இதேபோல் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஏறக்குறைய இதே விகிதத்தில் கல்வி கட்டணம் இருக்கும்.
தனியார் மருத்துவ நிறுவனங்களில் கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதற்கு காரணங்களாக கீழ்கண்டவற்றை குறிப்பிடலாம்.

தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் நவீன உள்கட்டமைப்பு, மேம்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதிநவீன வசதிகளில் அதிக அளவில் முதலீடு செய்கின்றன, இவை அனைத்தும் செயல்பாட்டுச் செலவுகளை அதிகரிக்கும்.

அனுபவம் வாய்ந்த ஆசிரிய உறுப்பினர்களை ஈர்ப்பதற்கும் தக்கவைப்பதற்கும் போட்டி ஊதியங்கள் தேவை, குறிப்பாக சிறப்புத் துறைகளில் ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் அளிக்கப்பட வேண்டும். உயர்தர ஆசிரியர் பணியாளர்கள் குறிப்பிடத்தக்க ஊதியம் கோரலாம்.

குறைவான மருத்துவ இடங்களுக்கு அதிக மாணவர்கள் போட்டியிடுவதால், தனியார் கல்லூரிகள் அதிக தேவையைப் பயன்படுத்தி அதிக கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கலாம்.

அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனங்களைப் போலன்றி, தனியார் கல்லூரிகள் அரசின் மானியங்களைப் பெறுவதில்லை, இது அந்த நிறுவனங்களின் கட்டணக் கட்டமைப்பை நேரடியாக பாதிக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Mbbs NEET Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment