Advertisment

வெளிநாடுகளில் மேற்படிப்பு : நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

கல்லூரி வாழ்க்கை மட்டும் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை. வாழ்க்கையில் பயணிக்கும் பல, குறுக்குவெட்டு பாதைகளில் ஒரு படி மட்டுமே இந்த கல்லூரி படிப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
study abroad,study visa us, study visa australia, best country to study, how to plan study abroad

study abroad,study visa us, study visa australia, best country to study, how to plan study abroad

ஷெல்ஜா சென்

Advertisment

பள்ளிபடிப்புக்கு பிறகு தத்தம் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பெற்றோர்கள் அடையும்  ஆவேசங்களை நாம் கடந்த சாப்தங்களில் இருந்து கண்டு வருகிறோம். இந்த ஆவேசம் உண்மையில் ஒரு ஆபாத்தான போக்கு என்று எடுத்துக் கொள்ளலாம்.  அவர்கள் நடுநிலைப் பள்ளியில் நுழைந்தவுடன், பெற்றோர்கள் "தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடல்" என்ற அழுத்தத்திற்கு உள்ளாகுகின்றனர்.

உங்கள் குழந்தைக்கு "பிரகாசமான மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்திற்கு உறுதியளிக்கும் நாடு இவைதான் என்று தனியார் நிருவனங்களும் காளான்கலைப் போல்   வளர்ந்து வருகின்றன.  நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், பி.எஸ்.ஏ.டி, எஸ்.ஏ.டி, ஏசிடி, ஏ.பி போன்றவைகளின் மூலம் உலகில் உள்ள விலையுயர்ந்த கல்வி தொழிற்சாலைகளில் சேரவேண்டும் என்பது இவர்களின் நோக்கம்.

தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த எதையும் செய்யத் தயாராக இருக்கும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஆர்வமுள்ள பெற்றோர்கள் செலவழிக்கும் உடமைகள்  பற்றியும் நாம் யோசித்தோமானால்  முழு கருத்தும் மிகவும் சிக்கலானது என்று நான் நினைக்கிறேன். வெளிநாட்டு படிப்பிற்கான நுழைவுத் தேர்வு வகுப்புகளைத் தங்கள் வழக்கமான பள்ளி, வீட்டுப்பாடம், தேர்வுகளோடு தொடர்ந்து படிக்க வேண்டிய மன அழுத்தத்தில் இன்றைய மாணவர் சமுதாயம் உள்ளது.

இந்த மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப செயல்படும் தனியார் நிறுவனங்கள்  நெறிமுறையற்ற நடைமுறைகளைக் நாம் குறிப்பிட்டாக வேண்டும் . பல நிறுவனங்கள்  மாணவர்களின் நோக்க அறிக்கை (எஸ்ஓபி), பொதுவான பயன்பாட்டுக் கட்டுரை, அவர்களின் பயோ - டேட்டா தயாரிப்பது போன்ற செயல்களின் மூலம் மேலை நாட்டு கல்லூரிகளில் ஏதேனும் விலைக்கு மாணவர்களை உறுதி செய்து விடுகின்றனர்.

மேலை நாடுகளில், சில உயர்க் கல்வி நிறுவனங்கள்  சமூக ஆர்வமுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம்.  இதுபோன்ற, ஒரு நல்ல கல்லூரியில் சேர வேண்டும்  என்பதற்காக, இந்தியாவில் சமூக முயற்சிகள் மற்றும் சேவையில் பங்கேற்க மாணவர்களை  தள்ளப்படுவது மிகவும் கவலையளிக்கும் ஒரு விஷயம்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களில்  அர்த்தமற்ற இன்டர்ன்ஷிப் செய்வது, பிறகு கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டவுடன் ஓட்டு மொத்த சமூக சேவை நடவடிக்கையை அவசரமாய் கைவிடுவது  பல கேள்விகளையும் எழுப்புகின்றது. சமூகப் பணி, சமூகத்தை பற்றி எண்ணம் மாணவர்களுக்கு இயல்பாக வரவேண்டும். கல்லூரி அட்மிஷனுக்காக  செய்யப்படுவது போலித்தனத்தின் உச்சகட்ட செயல்.

ieதமிழ் பிரத்தியோக அலசல் கட்டுரை: தேசிய குடிமக்கள் பதிவைச் செய்ய கட்டமைப்பு இருக்கிறதா?

பின்னர், நிச்சயமாக,சிறிய நகரங்களில் பல மாணவர்கள் இந்த வெளிநாட்டு கல்வி மோகத்தில் போலி பல்கலைக்கழகங்கள் மூலம்  தங்கள் பெரும் தொகையை  இழக்கின்றனர்,  நாடுகடத்தலிலும் சிக்குகின்றனர்.

இந்த கட்டுரைக்கான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் , 'வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வேண்டும் என்ற மாணவர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' ஒரு கருத்து கணிப்பு ஒன்றை முயற்சி செய்தோம்.  "பணம்," ஒரு கோரஸில் அவர்களின் விரைவான பதில்!

நகைச்சுவைகள் ஒருபுறம் இருக்க, வெளிநாட்டில் படிப்பது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது.

எவ்வாறாயினும், இதுபோன்ற ஒரு  சிக்கலான சமூக பிரச்சினையில் ஒருதலைப்பட்சமாக பணம் என்ற ஒற்றை  மட்டும் நியாயப்படுத்துவது தகாது என்பதையும் இங்கு  நான் குறிப்பிட வேண்டும்.

இந்திய கல்லூரிகளுக்கான அபத்தமான உயர் கட் ஆப் மதிப்பெண்கள் ,பழமையான கல்வி கட்டமைப்புகள், பாடத்திட்டத்தின் கடினத்தன்மை ஆகியவை ஏராளமான இளைஞர்களையும் பெற்றோர்களையும் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளைக் கருத்தில் கொள்ளத் தூண்டுகின்றன.

எனவே, ஒரு சீரான பார்வையை எடுத்து வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைகளை நாம் யோசிக்க முயற்சிப்போம்.

உங்கள் குழந்தைகளுடன் இதைப் படித்து, பின்னர் உங்கள் மனதோடு கலந்துரையாட  நான் பரிந்துரைக்கிறேன்:

ஒருபுறம் : 

கல்வி முறை - நமது இந்திய கல்வி முறை முதன்மையாக சொற்பொழிவு கற்றல் மற்றும் அறிவை கைப்பற்றுதல் ( எந்த வகையிளும்ப்)  ஆகியவற்றில் தான் கவனம் செலுத்துகிறது. மாற்று வழியில் கல்வியை சிந்திக்கவும், கேள்வி கேட்கவும், பிரதிபலிக்கவும், ஆராயவும் நமது கல்வி அமைப்பில்  வாய்ப்புகள் இல்லை. இந்தியாவில் சில புதிய கல்லூரிகளும் இதைச் செய்கின்றன, ஆனால் அவை மிகக் குறைவானவை.

தேர்வுகள் - பெரும்பாலான பல்கலைக்கழகங்கள்(குறிப்பாக அமெரிக்காவில்) மாணவர்களை - உயிரியல்/இசை, மருத்துவம் /திரைப்பட ஆய்வுகள், கணினி பயன்பாடு/ஊடகம் போன்ற அசாதாரண இணைப்புகளை எடுக்க அனுமதிக்கிறார்கள்.  அறிவியல் துறை , சமூக அறிவியல்/மனிதநேயம் துறை , போன்று மாணவர்களை இரும்பு திரையில் அடைத்து வைப்பது இது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

சர்வதேச வெளிப்பாடு - அவர்கள் உலகெங்கிலும் உள்ள மாணவர்களைச் சந்திக்கிறார்கள், மற்ற மக்களின் கலாச்சாரம் மற்றும் மொழிகளை அறிந்துகொள்கிறார்கள். உலகளாவிய பார்வைக்கு தங்கள் மனதைத் திறக்கிறார்கள்.

வசதிகள் - மிகவும் பிரபலமான சர்வதேச பல்கலைக்கழகங்களில் நுட்பமான நூலகங்கள், பயிற்சிகள், கிளப்புகள், பல விதமான மாணவர் அமைப்புகள், கற்ற குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு கற்றல் வசதியும் உள்ளது.

வளர்ச்சி திறன் -  வீட்டை விட்டு வெளியேறுவது, தங்களைத் சொந்தமாக தற்காத்துக் கொள்வது, வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நிர்வகிக்கக் கற்றுக்கொள்வது வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது.

ieதமிழ் பிரத்தியோக அலசல் கட்டுரை:  வணக்கம்! வணங்குவதற்கு இத்தனை வழிமுறைகளா?

மறுபுறம்

தயார்நிலை - இந்த நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருக்கும் சில இளைஞர்கள் உள்ளனர், இல்லாதவர்களும் உள்ளனர். பொறுப்புகளின் அளவை நிர்வகிக்க தேவையான "நிர்வாக திறன்கள்" (விடாமுயற்சி, நேர மேலாண்மை, நிறுவன திறன்கள், இலக்கு நிலைத்தன்மை போன்றவை) சில மாணவர்களிடம் இல்லை. பள்ளி வரை, நாம் அவர்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பை  வழங்கலாம், ஆனால் கல்லூரியில், அவர்கள் சொந்தமாக நிர்வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது சமாளிக்க முடியாததால் வெளியேற வேண்டிய பல மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன்.  இதுபோன்ற கடுமையான நடவடிக்கைக்கு உணர்வுபூர்வமாக தயாராக இல்லாத பல மாணவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். தனிமை உணர்வு, சமூக மற்றும் உணர்ச்சி ரீதியான சிரமங்கள் கடுமையான மனச்சோர்வு மற்றும் பதட்டப் பிரச்சினைகளுக்கு அம்மாணவர்களுக்கு வழிவகுத்தன.

மேற்கத்திய கல்வி’ என்ற மாயை - பல முறை, மாணவர்களும் பெற்றோர்களும், கட்டணம் ஒப்பீட்டளவில் குறைவாகவும் இருக்கும் என்று ஆடம்பரமான விளம்பரங்கள் மற்றும் வலைத்தளங்களின் டிசைன்கள் மூலம்  ஈர்க்கப்படுகிறார்கள்.  சிறிது நாட்ககளுக்கு பிறகு, கல்லூரியில்  பணம் செலுத்தியவுடன், அவர்கள் பளபளப்பான விளம்பர டிசைன்களில் உள்ள விரிசல்களைப் பார்க்கத் தொடங்குவார்கள்.  எனவே, பணம் செலுத்துவதற்கு முன்பு நீங்கள் சிறந்த ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இருப்பிடம் - வெளிநாட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவி  ஒருமுறை என்னிடம் , பெரிய நகரத்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது என்று விளக்கினார், ஏனெனில் அவர் வாழ்க்கையின் மையத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு இடத்தில் இருந்து படிப்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

பணம் - போதுமான பொருளாதார வளங்களை கொண்ட பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவது ஒரு பிரச்சினை அல்ல. உதவித்தொகை அல்லது மாணவர் கடனைத் தேர்வுசெய்யும் பலர் இருக்கக்கூடும். இந்த விருப்பம் உங்கள் சேமிப்பு மற்றும் கடன்களின் சுமைக்கு வழிவகுக்குமா?  என்பதை முதலில்  சிந்தித்துப் பாருங்கள்.

மந்தை மனநிலை - எல்லோரும் ஒரு காரியத்தை செய்வதால்,  நாமும் சில விசயங்களை செய்யும்போது, ​​அது சிக்கலாக முடிகிறது . நம்மை எங்கும் கூட்டி போகப்போவதில்லை என்று தெரிந்தும் டிரெட்மில்லில் ஓடுவதற்கு இது சமமாகும் . பெரும்பாலான மாணவர்கள் கல்லூரியில் ஆர்வமுள்ள பகுதிகளை ஆராய்வதோடு சரி, அந்த ஆர்வத்தை  வாழ்நாள் முழுவதும் தொடர முன்வரவில்லை . அறிவியலில் மாணவர்கள் வடிவமைப்பு துறைக்கு செல்லலாம், சட்டம் செய்பவர்கள் திரைப்படத் தயாரிப்பிற்கு மாறலாம்.

பிரபல எழுத்தாளர் எலிசபெத் கில்பர்ட், சிலர் எப்படி ஜாக்ஹாமர்களைப் ( jackhammer) போன்றவர்களை பற்றி கூறுகையில்,  அவர்கள் ஒரு விஷயத்தில் தீவிரமாக கவனம் செலுத்துகிறார்கள், ஆழமாக டைவ் செய்கிறார்கள் மற்றும் வேறு எந்த முயற்சியையும் கைவிடுகிறார்கள் . ஆனால் மற்றவர்கள் ஹம்மிங் பறவைகள் போன்றவர்கள். அந்தப் பறவை பூவிலிருந்து பூவுக்குச் செல்வது போல் ஆர்வத்தை ஒரு ஆர்வத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இட்டுச் செல்வது - மற்றும் பல்வேறு அறிவுகளை ஒன்றிணைத்து உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவது இவர்களின் நோக்கம் .

ஜாக்ஹாமர்கள் மட்டுமல்லாமல் நமக்கு ஹம்மிங் பறவைகள் அதிகம் தேவை.

கல்லூரி வாழ்க்கை மட்டும் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவதில்லை, அது அவர்களின் இறுதி இலக்கும் அல்ல. வாழ்க்கையில் பயணிக்கும் பல, குறுக்குவெட்டு பாதைகளில் ஒரு படி மட்டுமே இந்த கல்லூரி படிப்பு .

- ஆசிரியர் ஒரு குழந்தை மற்றும் இளம்பருவ மனநல நிறுவனமான Children  First  என்பதன் நிறுவனர் ஆவார்.

University Harvard University
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment