Advertisment

புதுவை தனியார் மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் உயர்வு: அ.தி.மு.க புகார்

தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒன்றேகால் லட்சம் அதிகரித்து ரூ.5 லட்சமாக கட்டடணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
ADMK Anbazhagan.jpg

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று (செப்.8)  செய்தியாளர்களிடம் பேசுகையில், 

Advertisment

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் கடந்த ஆண்டு ரூ.3,80,000 இருந்தது. மேனேஜ்மெண்ட கோட்டாவிற்கு ரூ.16 லட்சம் இருந்தது. இந்த ஆண்டு மருத்துவ கல்வியில் அரசு இடஒதுக்கீட்டில் சுமார் ஒன்றேகால் லட்சம் அதிகரித்து 5 லட்சமாகவும், மேனேஸ்மெண்ட் கோட்டாவுக்கு 20 லட்சமாக உயர்த்த கமிட்டி என்கிற பெயரில் ஒரு கொள்ளை கட்டணத்தை கமிட்டியின் சேர்மேன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உயர்த்த முடிவு செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

என்.எம்.சி மூலம் தெரிவிக்கப்பட்ட உத்தரவுப்படி தனியார் மருத்துவ கல்வியில் அந்தந்த மாநில அரசுகள் இடஒதுக்கீடு பெரும் இடங்களுக்கு அரசு சார்பில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அந்த கட்டணத்தை அரசு இட ஒதுக்கீட்டில் செல்லும் மாணவர்களுக்கு கட்டணம் நிர்ணம் செய்ய அரசு உறுதி செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ கவுன்சிலில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அரசும்,  அரசு உயரதிகாரிகளும் அதை மதிக்காமல் தனியார் மருத்துவ கல்லூரி உரிமையாளர்கள் கல்வி கட்டணத்தை அதிகப்படுத்துவதற்கு துணை நிற்கும் இந்த செயலை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இதில் முதலமைச்சர் நேரிடையாக தலையிட்டு என்.எம்.சி உத்தரவை நேரடியாக அமல்படுத்த வேண்டும் அல்லது இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய நாம் அனுப்பிய சந்திராயன்-3 மூலம் உலக நாடுகள் எல்லாம் நம்மை திரும்பி பார்க்கும் இவ்வேலையில், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசானது தான் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தாமல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவை தடுக்காமல், மக்களை திசை திருப்ப சனாதானம் என்ற பெயரில் திட்டமிட்டு மதரீதியான துவேஷத்தை திமுக முதலமைச்சர் மற்றும் அசரது மக்கள் உதயநிதி அவர்களும் மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் தொடர்ந்து சனாதானத்தை ஒழிப்பேன் என்று பேசி மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டிருப்பது ஒரு வெட்கக்கேடான செயலாகும்.

இந்து சனாதனம் என்கின்ற பெயரில் எந்தவொறு சட்டத்தின் ஆட்சியும் இங்கு நடைபெறவில்லை. பெண்களுக்கு உரிமை உள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது. கணவன் இல்லை என யாரும் உடன்கட்டை ஏறவில்ல. ஆனால் இல்லாத ஒன்று எடுத்துக்கூறி இந்து மதத்தை புன்படுத்தும் நோக்கில் சிறுபான்மை மக்களின் ஓட்டுவங்கியை பெற திமுக முயற்சித்து வருகிறது.

ஒவ்வொருவரும் பிறப்பால் தங்கள் மதத்தை சார்ந்தவர்கள். எல்லா மதத்திலும் உயர்ந்த நோக்கம், நல்லொழுக்கம், மற்றவர்கள் மீது கடுமையான அன்பு செலுத்துதல், மதத்திற்குள்ளேயே 100 வித்தியாசங்கள், மூட நம்பிக்கைகள், மதத்தின் பெயரால் மாந்திரீகம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் காலம் தொட்டு இருந்து வருகின்றன. மதத்தில் உள்ள நற்செய்திகளை எடுத்துக்கொண்டு தீயவைகளை புறந்தள்ளுவது மனித  பண்பாகும்.

மக்களை ஏமாற்றி மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் பிழப்பு நடத்தும் திமுக போன்ற அரசியல் கட்சியில் உள்ளார்கள். பிற மதத்தினரின் வாக்குகளை பெறுவதற்காக திட்டமிட்டு தான் சார்ந்த இந்து மதத்தை பற்றியும் தவறாக பேசி வருகின்றனர்.

இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேர்மாறான ஒன்று. தமிழ்நாட்டின் முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு நேர்மாறாக எடுத்து கூறும் போது இவர்களின் எம்எல்ஏ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ரத்து செய்ய வேண்டும்.

இந்து மதத்தில் சனாதானத்தை ஒழிப்பேன் என ஸ்டாலின் பேசியதற்கு வேறு மதத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் கென்னடி இந்து மதத்தை பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது. இந்து மதத்தை குறைத்து பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கென்னடி போன்ற நபர்களால் புதுச்சேரி மாநலத்தில் மதவாத கலவரத்தை தூண்டும் நிலை உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்ஏவுக்கு மதத்தை பற்றி பேச எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. எம்.எல்.ஏ என்பவர் எல்லா மதத்திற்கும் சமமானவர்.

இந்து மதத்தை சேர்ந்தவர்கள், பிற மதத்தை சேர்ந்தவர்கள் வருகின்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பதிலடியை கொடுப்பார்கள்.

கென்னடியின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க கோரி கழக தலைமை அனுமதி பெற்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுக்கப்படும். தனது வீட்டில் சாமியாரை வைத்து பூஜை செய்கின்றனர். மாட்டு சானத்தில் வீட்டில் விநாயகர் பிடித்து வைக்கும் சிவா எம்.எல்.ஏ சனாதனத்தை பற்றி பேச தகுதியில்லை.

திமுகவை சேர்ந்தவர்கள் அரசியல் ரீதியாக பேசுவது நல்லது. பிற மதத்தை பற்றி புன்படுத்தும் வகையில் பேசுவது தவறான ஒன்று. பெண்ணுரிமை, பேச்சுரிமை எப்போதோ கொடுக்கப்பட்டுள்ளது.

எம்எல்ஏக்களுக்கு ஒரு அரசு விழா பிடிக்கவில்லை என்றால் போக கூடாது. ஆனால் பாரதமாத சிலை திறப்பு விழாவிற்கு சென்றுவிட்டு அங்கு கவர்னர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த இடத்திலேயே தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் வெளியே வந்து வீர வசனம் பேசக்கூடாது.

மதத்தை பற்றி தவறாக பேசிவிட்டு சிறுபான்மையினர் பின்னால் ஒளிந்துகொள்வது தான் திமுகவின் வழக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில கழக இணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கணேசன், மாநில கழக துணைச் செயலாளர் உமா, மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment