பாரதியார் பல்கலைகூடம், தொழில் நுட்ப கல்வியான நுண்கலை (Fine Arts) துறைப் படிப்பான Arts and Crafts படிப்பை கலை மற்றும் அறிவியல் (Arts and Science) கல்வியாக மாற்ற கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் தன்னிச்சையாக புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான பாரதியார் பல்கலைக்கூட நுண்கலைத் துறை மாணவர்களின் கோரிக்கைகள் இங்கே.
தொழில் நுட்ப கல்வியான (Technical Education) நுண்கலைத் துறைப் (Fine Arts) படிப்பான Arts and Crafts படிப்பைக் கலை மற்றும் அறிவியல் (Arts and Science) கல்வியாக மாற்ற, கலைப் பண்பாட்டு துறைச் செயலர் அவர்கள் தன்னிச்சையாக புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட கடிதத்தைத் திரும்ப பெற வேண்டும்.
கடந்த இருபது ஆண்டுகளாக புதுடெல்லி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) ஏற்புப் (Aporoval) பெற்று நடத்தப்படும் நுண்கலைத் துறைத் (Fine Arts) தொழில்நுட்ப படிப்பான Arts and Crafts படிப்பு AICTE அங்கிகாரத்தை பெற மறுத்தாலோ அங்கீகாரத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டாலோ அந்த படிப்பை நடத்தக் கூடாது என்றும் அதற்காக வழங்கப்படும் பட்டம் (Degree) செல்லாது என்றும் AICTE கூறியிருக்கும் நிலையில், கல்லூரி நிர்வாகம் தொடந்து நுண் கலைத் துறையின் (Fine Arts) தனித்தன்மையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதைக் கைவிட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்ப கல்விக்கான நுண்கலைத் துறை (Fine Arts) படிப்பான Arts and Crafts படிப்பு AICTE ஏற்பு (Approval) மற்றும் அனுமதி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையை இணைக்க வேண்டும்.
நுண் கலைப் படிப்பு தொழில்நுட்ப கல்வியில் வராது என்று பொய் ஆவணங்களை கொடுத்து கலைப் பண்பாட்டு துறைச் செயலரை திசை திருப்பிய முன்னாள் முதல்வர் பி.வி.போஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுண்கலைத் துறை மற்றும் நிகழ் கலைத் துறை என இரண்டாக பிரிக்க வேண்டும். அதிக அளவில் மாணவர்களைக் கொண்ட நுண்கலைத் துறைக்கு தனியாக, முதல்வரை நியமிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (25.09.2024) காலையில் பல்கலைக்கூட வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.