முதுநிலை மருத்துவ படிப்பு இரண்டாவது சுற்றுக்கு கலந்தாய்வில் பதிவு கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்கலாம் என, புதுச்சேரி சென்டாக் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் சுற்று மாணவர் சேர்க்கைக்கு பதிவு கட்டணம் செலுத்தி பாட விருப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இதையும் படியுங்கள்: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு : புதுவை ஆளுனர் புதிய அறிவிப்பு
முதல் சுற்று கலந்தாய்வில் இடம் ஒதுக்கப்பட்டு கல்லுாரியில் சேர்ந்த மற்றும் சேராத மாணவர்கள் அனைவரும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதி உடையவர்கள். நீட் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று கலந்தாய்வு மூலம் கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களின் பட்டியல் மற்றும் காலியிட விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் சுற்றில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பதிவு கட்டணம் செலுத்தாமல் பங்கேற்கலாம். இரண்டாவது சுற்றில் இடம் ஒதுக்கப்பட்டு கல்லுாரியில் சேராத மாணவர்கள் பதிவு கட்டணம் பறிமுதல் செய்யப்படும். பாட விருப்பத்தேர்வு அடிப்படையில் புதிய இடம் ஒதுக்கப்பட்டால் முதல் சுற்றில் அனுமதிக்கப்பட்ட இடம் ரத்தாகிவிடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“