புதுச்சேரி சென்டாக் முதுகலை நீட் படிப்புகளுக்கான தகுதிப் பட்டியலையும், முதுகலை பல் மருத்துவ படிப்புகளுக்கான தகுதிப் பட்டியலையும் இன்று (ஜூலை 20) மாலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சென்டாக் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள செய்து குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
இதையும் படியுங்கள்: புதுச்சேரி அரசு ஐ.டி.ஐ-யில் ‘ஸ்பாட் அட்மிஷன்’; ஜூலை 28 கடைசி தேதி
முதுகலை நீட் (M.D./M.S.) படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீடு, மேலாண்மை ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மை ஒதுக்கீடு மாணவர்களுக்கான திருத்தப்பட்ட வரைவு தகுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை www.centacpuducherry.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். கட்-ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. PG NEET MEDICAL 2023 படிப்புகளுக்கு SC/ ST /OBC/ MBC/ EBC/ BCM மற்றும் சிறுபான்மையினர் என பிரிவு வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
இதேபோல், தகுதியுள்ள விளையாட்டு நபர், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சிறப்பு பிரிவினருக்கான பட்டியலும் வெளியிடப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளது. ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், டாஷ்போர்டு உள்நுழைவைப் பயன்படுத்தி 24.07.2023க்கு முன் சமர்ப்பிக்கலாம்.
இதேபோல், முதுகலை பல் மருத்துவ (NEET-MDS-2023) படிப்புகளுக்கான வரைவு தகுதி பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil