புதுச்சேரி மாணவர்களுக்கு புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டுமென காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் தலைமையில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து மனு கொடுத்தனர்.
காங்கிரஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம், காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் மற்றும் புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் தலைவர் டாக்டர். ஹர்ஷவர்தன் ஆகியோர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங்கை சந்தித்து மாணவர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாணவர்களுக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவது தொடர்பான ஒரு மனுவினை அளித்தார்கள்.
எம்.பி வெ.வைத்திலிங்கம் புதுச்சேரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பும்படி வலியுறுத்தினார். மேலும் இது சம்பந்தமாக மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் பேசுவதாகவும், கல்வித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவில் எடுத்துரைப்பதாகவும் தெரிவித்தார். பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத் சிங் இட ஒதுக்கீடு சம்பந்தமாக பல்கலைக்கழக நிலைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்கள் என்றும் எம்.பி தெரிவித்தார்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil