புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் பி.எட்., படிப்பிற்கு நாளை வரும் 3ஆம் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு கல்வியியல் கல்லூரி முதல்வர் வினோத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில் 2023 -24 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான பி.எட்., இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்புக்கு புதுச்சேரியைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய அலைய வேண்டாம்; பிளஸ் 2 மாணவர்களுக்கு புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்
விண்ணப்பங்களை கல்லுாரி இணையதளத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நகல் சான்றிதழ்களுடன் தபால் மூலம் அல்லது நேரில் வரும் 18 ஆம் தேதி மாலைக்குள் வந்து சேர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil