scorecardresearch

புதுச்சேரியில் வேலை வாய்ப்பு முகாம்; 10-ம் வகுப்பு – பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம்!

புதுச்சேரி வேலை வாய்ப்பு முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 1000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன

புதுச்சேரியில் வேலை வாய்ப்பு முகாம்; 10-ம் வகுப்பு – பி.இ படித்தவர்கள் பங்கேற்கலாம்!

புதுச்சேரி தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் நாளை மார்ச் 4 ஆம் தேதி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதுதொடர்பாக, புதுச்சேரி தொழிலாளர் துறை செயலர் முத்தம்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 1000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

இதையும் படியுங்கள்: UPSC Exam: வன ஆக்கிரமிப்பு, வெளிநாட்டு பங்களிப்பு கொள்கை, பேரிடர் மேலாண்மை… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

இன்ஜினியரிங், டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல், பார்மாசிஸ்ட், பிளஸ் 2, ஐ.டி.ஐ., பத்தாம் வகுப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களது பயோடேட்டா, 10 நகல், அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்களை கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர்: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Puducherry employment camp degree holders can attend