புதுச்சேரியில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவிற்காக நேரில் அணுக வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Advertisment
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை செயலர் முத்தம்மா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த 2016 ஆம் ஆணடு முதல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
எனவே, கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விவரங்கள் பள்ளி கல்வி இயக்கத்தின் மூலம் பெறப்பட்டு வேலைவாய்ப்பகத்தில் தேசிய தகவல் தொழில்நுட்பம் மையம் உதவியுடன் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மதிப்பெண் சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பதிவிற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுக வேண்டாம்.
மேலும் பிளஸ் 2 கல்வித் தகுதி பதிவு செய்யப்பட்ட புதிய வேலை வாய்ப்பு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுவரை வேலைவாய்ப்பு பதிவு செய்யாத மாணவ, மாணவிகள் தங்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil