/indian-express-tamil/media/media_files/kuurORwfiCQVlVjMEqSH.jpg)
Source: Facebook/ FIRE Service Department Puducherry
புதுச்சேரியில், தீயணைப்புத்துறை வீரர்கள் பணிக்கான உடல் திறன் தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குகிறது.
புதுச்சேரி தீயணைப்புத்துறையில், நிலைய அதிகாரி - 5; தீயணைப்பு வீரர் - 5; தீயணைப்பு வாகன ஓட்டுநர் - 12; பதவிகளை, நேரடி தேர்வு ஆட்சேர்ப்பு மூலம் நிரப்ப, ஆன்லைன் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதில், பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
தேர்வர்களுக்கான, உடல் அளவீடுகள், உடல் தர நிலைகள் மற்றும் உடல் திறன் தேர்வு வரும், 23ஆம் தேதி முதல் புதுச்சேரி, கோரிமேட்டில் அமைந்துள்ள, காவலர் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி அட்டையை வரும், 12ஆம் தேதி இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தேர்வில் கலந்து கொள்ள தேர்வர்கள் அனுமதி அட்டை மற்றும் அரசால் வழங்கப்பட்ட, புகைப்பட அடையாள சான்று கொண்டு வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.