/tamil-ie/media/media_files/uploads/2023/04/tamil-indian-express-2023-04-26T160309.424.jpg)
புதுச்சேரி தடய அறிவியல் இயக்குனரகத்தில் விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி கிருமாம்பாக்கம் தடய அறிவியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள விஞ்ஞானிகள் காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுவை கிருமாம்பாக்கத்தில் தடய அறிவியல் ஆய்வகம் உள்ளது. இந்த ஆய்வகத்தில் காலியாக உள்ள விஞ்ஞானிகள் காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
3 விஞ்ஞானிகள் பணியிடங்களுக்கு 40 வயதுக்கு உட்பட்ட எம்.எஸ்.சி. (வேதியியல், உயிரி வேதியியல், தடயவியல் அறிவியல், மைக்ரோ பயலாஜி) முடித்த முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஓய்வு பெற்றவர்களாக இருந்தால் வயது வரம்பு 63 வயதுக்குள் இருக்கவேண்டும். இதற்கான விண்ணப்பங்களை கிருமாம்பாக்கம் காவல்நிலைய வளாகத்தில் உள்ள தடய அறிவியல் ஆய்வக இயக்குனருக்கு வருகிற நவம்பர் 6 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.