/indian-express-tamil/media/media_files/2025/10/27/puducherry-2025-10-27-19-33-53.jpeg)
Puducherry
புதுச்சேரி, அக்டோபர் 27:
புதுச்சேரி அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளின் விவரங்களைச் சமூக ஊடகங்கள் வழியாகப் பொதுமக்களிடம் விரைந்து கொண்டு சேர்க்கும் நோக்கில், செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கும், புதுச்சேரிப் பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிக்கும் இடையே இன்று (அக்டோபர் 27) முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
சமூக ஊடகக் குழு (Internship & Communication Wing):
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறையின் சார்பில், புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியில் காட்சித் தொடர்புத் (Visual Communication) துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களைக் கொண்டு, ஒரு பிரத்யேக சமூக ஊடகக் குழு (Social Media Team) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவானது, தலைமைச் செயலகத்தில் இருந்து செயல்பட உள்ளது.
புதுச்சேரி பல்கலைக் கழகப் பதிவாளர் (பொறுப்பு) ரஜனீஷ் புட்டானி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர்ஆர். முனுசாமி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
இந்த நிகழ்வில், புதுச்சேரிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பிரகாஷ் பாபு, புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் மொகமது அஷான் அபித், புல முதன்மையர் (Dean – International Relations) பேராசிரியர் விக்டர் ஆனந்தகுமார், மற்றும் சமுதாயக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் லலிதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நோடல் அதிகாரிகள் நியமனம்:
ஐந்து மாணவர்களைக் கொண்ட இந்தக் குழுவை ஒருங்கிணைப்பதற்காக, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அதன் இயக்குநர் ஆர். முனுசாமி மற்றும் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி சார்பில் முனைவர் கிருத்திகா ஆகியோர் நோடல் அதிகாரிகளாகச் (Nodal Officers) செயல்படுவார்கள்.
புதுச்சேரி அரசின் திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடைய இந்த மாணவர் குழு முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us