அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் 67 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. அடுத்து குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத பதவியான 300 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ள பள்ளி கல்வித் துறை விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
அதன்படி, இன்று 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் அடுத்த மாதம் 22ஆம் தேதி மாலை 5.45 மணி வரை https://recruitment.py.gov.in என்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“